கோடை காலம் தொடங்கி விட்டது.

04 April 2009

கோடை காலம் தொடங்கி விட்டது. அடுத்த 3 அல்லது 4 மாதங்களுக்கு வெயில் கடுமையாகக் கொளுத்தித் தீர்க்கும்.ஆண்டுதோறும் கோடை காலம் வந்தாலும், நாம் கோடையை எதிர்கொள்ளும் வழிமுறைகளை சில நேரங்களில் கடைபிடிக்கத் தவறி விடுகிறோம்.இதனால் பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.கோடையை எதிர்கொள்ள இதோ சில எளிய யோசனைகள்:தண்ணீர் தேவையை விட அதிகமாக அருந்துங்கள். உடலில இருக்கும் தண்ணீர் வியர்வையாக அதிகம் வெளியேறும் என்பதால், தண்ணீர் அதிகமாக குடிப்பது உடல் சோர்வைத் தடுத்து புத்துணர்வை அளிக்கும்.கண்டிப்பாக மாலையிலோ அல்லது இரவிலோ ஒருமுறை குளிர்ந்த நீரில் குளியுங்கள். இதனால் தோலில் ஏற்படும் வெயில் பாதிப்பு நீங்கும். பகல் நேரத்தில் வெளியே சுற்றித் திரியும் பணியில் இருப்பவர்கள், அடிக்கடி ஜூஸ், பழச்சாறு போன்ற குளிர்பானங்களை தேவைக்கேற்ப பருகவும். இதனால் உடல் சோர்வு நீங்கும்.இளநீர் கண்டிப்பாக அருந்துங்கள். இது உடல் சூட்டைத் தவிர்த்து சிறுநீரை எளிதாக பிரிய வழிவகுக்கும்.முடிந்தவரை எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவு வகைகளை இரவில் உண்ணவும். இது ஜீரணத்தை விரைவுபடுத்தி, உடல் சோர்வு மற்றும் அஜீரணக் கோளாறுகளைத் தவிர்க்கச் செய்யும். தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம். உடல் சூட்டை அது தணிப்பதுடன், மலச்சிக்கல் வராமலும் இருக்க ஏதுவாகும்.வெயிலில் வெளியே செல்ல நேரிட்டால், கண்டிப்பாக தொப்பி அணிந்து செல்லவும். தலையில் வெயில் தாக்குதல் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.அதிக தண்ணீர், தண்ணீர்ச் சத்துடைய பழங்க்ளை அதிகளவில் சாப்பிடுங்கள். கோடையைத் தவிர்த்து நலமுடன் இருங்கள்.
*******************************************************************************************
நீங்கள் பார்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். .240 பின்னர் அர்ஷின்மீது அமர்ந்தான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவனைவரை ஓடுகின்றன. .241 காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான்.‌
(விரிவான விவரங்களுக்கு எண்ணின் மேல் அழுத்தவும். pls download Automatic font install)

Read more...

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP