ஒரு இலவச மின் இணைப்பு வழங்க மின்வாரியத்துக்கு செல்வு ?.

29 November 2011


தமிழகத்தில் 46 சதவீத மின்சாரம் இலவச திட்டங்களுக்காக விநியோகம் செய்யப்படுகிறதாம்

தமிழகத்தில் இலவச மின்சார இணைப்பு கேட்டு நான்கு லட்சம் விவசாயிகள் காத்திருக்கின்றனர். பதிவு மூப்பு அடிப்படையில் ஆண்டுக்கு 40 ஆயிரம் இணைப்புகள் தான் வழங்க முடியும். இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கு சாத்தியமில்லை. ஒரு இலவச மின் இணைப்பு வழங்க மின்வாரியத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகிறதாம்.

மொத்த மின்சாரத்தில் 28 சதவீதம் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்துக்கும், குடிசைகளுக்கும், கைத்தறி நெசவாளர்களுக்கும் இலவசமாகவே போய் விடுகிறது. மேலும் 18 சதவீதம் "லைன் லாஸ்' என்ற அடிப்படையில் போய் விடுகிறது. இந்த வகையில் 46 சதவீதம் போக, எஞ்சியுள்ள 54 சதவீதம் மட்டுமே நுகர்வோருக்கு வழங்கப்பட்டு அவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

விவசாயத்திற்கு பகலில் ஆறு மணி நேரம், இரவில் 12 மணி நேரம் என்ற அளவில் மின்சாரம் கொடுத்து வருகிறோம். 25 ஆண்டுகளாக இதே கொள்கை தான் பின்பற்றப்படுகிறது. பகலில் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்க வேண்டியிருப்பதால் விவசாயிகளுக்கு பகலில் வழங்கப்படும் மின்சார கால அளவை எப்படி அதிகரிக்க முடியும். அதிலும் இலவச மின்சாரம் பயன்படுத்துவோருக்கு மீட்டரும் கிடையாது. இதனால் ஒவ்வொரு இலவச மின்நுகர்வோரும் எவ்வளவு பயன்படுத்துகிறார்கள் என்ற உண்மையும் தெரிவதில்லை.

இதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காமல் கட்டணத்தை மட்டும் உயர்த்திக் கொண்டே போவதில் ஒரு உருப்படியான தீர்வும் ஏற்படாது. விழிக்குமா தமிழக அரசு. அல்லது ஒட்டு அரசியலுக்கு பயந்து, கண்டு கொள்ளாமல், தொடர்ந்து மக்கள் மீது சுமையை ஏற்றுவது மக்களை மேலும் மேலும் துயரத்தில் ஆழ்த்தும்.  

Read more...

மக்களை ஏமாற்றும் அரசியல் வாதிகளும், மக்களை நினைத்து செருப்பால் அடித்துக் கொண்ட நேர்மையான அதிகாரியும்

27 November 2011


குடிக்க கூழுக்கு வழியில்லை; கொப்பளிப்பது பன்னீரில் என்ற கதையாக இருக்கிறது. அத்தியாவசிய திட்டங்களுக்கு நிதி இல்லை என்று சொல்லிக் கொண்டு அவசியமான வைகளின் விலைகளை உயர்த்திவிட்டு, திட்டங்களை கிடப்பில் போடுகிறார்கள். ஆங்காகங்கே மழை நீர் தேங்கி குளம் போல் கட்சி அளிக்கிறது. வீடுகளை சுற்றி கழிவு நீர் சேர்ந்து நாற்றம் வீசுவதால் மக்கள் நடமாட முடியாமல் அவதிப்படுகிறார்கள். சரியான சாலை வசதி இல்லை, குடிநீர் வசதி கிடைக்காத கிராமங்கள் கூட இன்னும் இருக்கின்றன. இந்த லட்சணத்தில் இலவச நாப்கின், இலவச லாப்டாப், மிக்சி, கிரைண்டர், இலவச மின்விசிறி என்று இலவசங்கள் ஒருபுறம் அரசு கஜானாவை காலி செய்து கொண்டிருக்கின்றன. மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கும் இந்த நேரத்தில் இலவச மின்சாரம் தேவை தானாகாசு கொடுத்து மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கும் அரசு, இலவசமாக பயன்படுத்துவோருக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்காதது ஏனோமீட்டர் வாங்க கூட வசதியில்லாதவர்கள் என்றால், எது எதற்கோ தண்ட செலவு செய்யும் அரசு, மீட்டர்களையும் இலவசமாக பொருத்தி பயனீட்டு அளவை கட்டுப்படுத்தினால் ஓரளவு மின்சாரம் சேமிக்கப்படும் அல்லவா? நல்லவன் சேர்த்ததை நாற வாயன் அழித்தான் என்ற கதையாக இவர்கள் ஓசியில் அனுபவிப்பதற்காக மற்றவர்கள் எவ்வளவு காலம் தண்டம் அழுவது?  ௫௦௦ ஒரு லட்ச்சம் கோடி நஷ்டம் என்பது எவ்வளவு பெரிய தொகைஇது யார் பணம்? மக்கள் பணம் தானே? கஷ்டப்பட்டு சம்பாதித்து வரியாக செலுத்துவோரின் உழைப்பு வீணாக்கப்படுவது நியாயமா? வரிப்பணம் வீணாகக்கூடாது என்று சொன்னால், அராஜக திராவிட முன்னேற்ற கழகத்தின் அடிவருடிகள் நீ மட்டும் தான் வரி கட்டுகிறாயாஎன்று குதர்க்கம் பேசுகின்றனர். எந்த வகையிலும் உழைத்து பிழைக்க முடியாதவர்களுக்கு இலவசமாக கொடுத்தால் நியாயம். உழைக்க தயாரில்லாத கூட்டத்துக்கு கொடுப்பது அநியாயம். அரசுப்பணம் இப்படி வீணாகும் வரை, இது போன்ற நஷ்டங்கள் தொடரத்தான் செய்யும். மின் வாரியத்தை நஷ்டத்திலிருந்து மீட்க, தயவு தாட்சண்யம் பார்க்காமல் இலவச மின்சாரத்துக்கு பதில் ஒரு குறைந்த பட்ச தொகையை வசூலிக்கலாம். அரசியல்கட்சிகளின் ஆடம்பர பொதுக்கூட்டங்களுக்கு பொது மின்சாரத்தை கட்டாயம் தடை செய்து, ஜெனரேடர் பயன்படுத்துமாறு கட்டுப்படுத்தலாம். இன்னும் என்னென்ன வகைகளில் எல்லாம் மின் சிக்கனத்தை கடைப்பிடிக்க முடியுமோ அப்படியெல்லாம் செய்யலாம். மின்வாரியத்தில் தேவைக்கு அதிகமாக இருக்கும் ஊழியர்களை கண்டறிந்து, உடனே வீட்டுக்கு அனுப்பலாம். அரசு உடனடியாக ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டு, மக்களிடம் உண்மை நிலவரத்தை சொல்லி, குஜராத்தில் மோடி செய்தது போல் தடையற்ற மின்சாரம் வேண்டுமானால், கட்டணம் செலுத்துங்கள் என்று வெளிப்படையாக அறிவித்து விடலாம். இதே போல் தொடர்ந்து நஷ்டத்தில் நீண்ட காலம் ஓட்ட முடியாது. ஓட்டுக்காகவும், வீம்புக்காகவும் செயல்படுவதை விடுத்து, முதல்வர் உடனடியாக களம் இறங்கி மக்களிடம் உண்மையை எடுத்து உரைத்து, அவர்களின் ஒத்துழைப்பை பெறுவது அவருடைய மதிப்பையும், மரியாதையையும் உயர்த்தும். அதை விட்டு விட்டு தொடர்ந்து மக்கள் மீது மேலும் மேலும் சுமத்தினால் வரும் தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள். 

செருப்பால் அடித்துக் கொண்ட நேர்மையான அதிகாரியும்

ஐஏஎஸ் அதிகாரிகளாக இருப்பவர்கள் எல்லோருமே சந்தோஷமாக வேலை பார்க்கிறார்கள் என சொல்ல முடியாது. பல துறைகளில் மன அழுத்தம், வேலைச் சுமை, உயிர் பயத்துடன்தான் வேலை பார்த்து வருகிறார்கள். அரியானா மாநிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற ஒரு ஐஏஎஸ் அதிகாரி, தனது ஷூவை கழட்டி தானே தலையில் அடித்துக் கொண்ட செய்தி பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா நகர்ப்புற வளர்ச்சித் துறையின் நிர்வாக அலுவலர் பிரவீன்குமார் ஐஏஎஸ். லஞ்சம் வாங்காத நேர்மையான அதிகாரி.  சிக்கந்தர்பூர் பிரிஸ்டல் சவுக் என்ற பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு, சக அதிகாரிகளுடன் சென்றிருக்கிறார். அதிகாரிகள் படையை பார்த்ததுமே விஷயத்தை புரிந்து கொண்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்புக் கொடி தூக்கினர். அதிகாரி என்ற முறையில், கடமையை நிறைவேற்ற வந்திருப்பதாக கூறிய பிரவீன்குமார், கூடியிருந்த ஒவ்வொருவரின் காலைத் தொட்டு, கடமையை நிறைவேற்ற வழிவிடும்படி மன்றாடினார். 

ஆனாலும், கூட்டம் வழி விட மறுத்தது. திடீரென்று காலில் இருந்த ஷூவை கழற்றிய பிரவீன்குமார், தனக்கு தானே ஷூவால் அடித்துக் கொண்டார். எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் ஒதுங்கிக் கொள்ள, அந்த கட்டிடத்திலேயே இரவு தங்கி, விடிந்ததும் இடிப்பு பணியை தொடங்கி முடித்து விட்டுதான் வீடு திரும்பினார் அந்த அதிகாரி. நான் நேர்மையானவன் என்பதை நிரூபிக்க இதை விட்டால் எனக்கு வேறு வழி தெரியவில்லை என்று கூறிய பிரவீன்குமாரை சமாதானப்படுத்த, எதிர்ப்பு தெரிவித்தவர்களே  ஸ்வீட் மற்றும் பரிசுப் பொருட்களை அளித்துள்ளனர். 

மாவட்ட கலெக்டர்கள், நிலம் கையகப்படுத்தும் அதிகாரிகள், ஆக்கிரமிப்பு அகற்றும் அதிகாரிகள், வருமான வரி அதிகாரிகள், பத்திர பதிவு துறை அதிகாரிகளில் அரசியல்வாதிகள், பணக்காரர்களின் உத்தரவுக்கும் பணத்துக்கும் பணிந்து செல்பவர்களும் இருக்கிறார்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கும் நேர்மையானவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்குத்தான் கொலை மிரட்டல், டிரான்ஸ்பர் என பிரச்னை பல ரூபங்களில் வருகிறது. அதையும் தாண்டி நேர்மையான அதிகாரிகள் இருப்பது சந்தோஷம் தருகிறது.




Read more...

பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்

26 November 2011


தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள 6 பேர் மற்றும் 399 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செலுத்தாமல் நிலுவையில் உள்ள தொலைபேசிக் கட்டணம் ரூ.7.30 கோடி! அந்த 6 எம்.பி.க்களில் 5 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர். இந்த காங்கிரஸ் எம்.பி.க்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம். கிருஷ்ணசாமியின் பங்கு ரூ.13.19 லட்சம்.
 இந்த விவரங்களை மத்திய அரசு வெளியிடவில்லை. சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு இந்த விவரங்களை மகாநகர் டெலிபோன் நிகாம் நிறுவனம் அளித்துள்ளது. இவர்கள் மீது விதிப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது. ஆனால், எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர் மீதும் எந்த அரசு நிறுவனமும் எதற்காகவும் நடவடிக்கை எடுப்பதில்லை என்பதுதான் நடைமுறை உண்மை.
 நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் இரண்டு தொலைபேசி இணைப்புகளை மத்திய அரசு வாடகை இல்லாமல் வழங்குகிறது. ஒன்று, அவரது தில்லி இல்லத்துக்கு. மற்றோர் இணைப்பு அவரது சொந்த ஊரில் உள்ள வீட்டிற்கு! இந்த இரண்டு தொலைபேசிகளிலும் ஆண்டுக்கு 50,000 அழைப்புகள் இலவசம். இதற்கும் மேலாக பேசப்படும் அழைப்புகளுக்கு மட்டுமே மகாநகர் டெலிபோன் நிகாம் கட்டணம் வசூலிக்கிறது. அந்தக் கட்டணத்தையும்கூட இவர்கள் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
 இதுமட்டுமல்ல, முன்னாள் எம்.பி.க்கள் சிலர் தங்களுக்கு அரசு ஒதுக்கிய வீடுகளுக்கான வாடகையையும் செலுத்தியதில்லை. பதவிக்காலம் முடிந்த பிறகு வீட்டைக் காலி செய்யாதவர்களும் உள்ளனர். மக்களவைத் தலைவர் மீரா குமார், தனது தந்தை ஜெகஜீவன்ராம் வீட்டில் வசித்து வந்ததற்காக ரூ.1.98 கோடி நிலுவை. ஆனால், தான் இந்த வீட்டிலிருந்து 2002-ம் ஆண்டிலேயே வெளியேறிவிட்டதாக மீரா குமார் அலுவலகக் குறிப்பு சொல்கிறதே தவிர, இந்தத் தகவல் தவறு என்று தைரியமாக அறிவிக்க முடியவில்லை. மக்களவைத் தலைவர் மீராகுமார் தங்கியிருந்த வீட்டுக்கு வாடகை தர மறந்ததில் வியப்பில்லை. அவரது தந்தை பாபு ஜகஜீவன் ராம் வருமான வரி கட்ட மறந்துவிட்டதாக நாடாளுமன்றத்தில் கூசாமல் தன்னிலை விளக்கம் கொடுத்தவர்தான் என்பதை இந்த நேரத்தில் நினைவுகூர விரும்புகிறோம்.
 அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருக்கும் எம்.பி.க்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது ஒருபுறம் இருக்க, இவர்கள் தேர்தல் மனுக்களை ஏன் தேர்தல் ஆணையம் நிராகரிக்கக்கூடாது அல்லது இவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பென்ஷன், தற்போதைய உறுப்பினர்கள் என்றால் அவர்களது சம்பளத்தில் இத்தகைய நிலுவைத் தொகையை அரசு ஏன் பிடித்தம் செய்யக்கூடாது? சட்டத்தை உருவாக்குபவர்கள் (லா மேக்கர்ஸ்) சட்டத்தை முறிப்பவர்களாக (லா பிரேக்கர்ஸ்) மாறுவதை மத்திய அரசு எப்படி அனுமதிக்கிறது?
 சென்ற ஆகஸ்ட் மாதம்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் ரூ.16 ஆயிரத்திலிருந்து ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. அலுவலகச் செலவினத்துக்காக மாதம் ரூ.25 ஆயிரம், தொகுதிப் படி ரூ.25 ஆயிரம் வழங்கப்படுவதுடன், இந்த ரூ.50 ஆயிரத்துக்கு வருமான வரி விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. கார் வாங்குவதற்காக ரூ.4 லட்சம் வட்டியில்லாக் கடன் பெறலாம். இதைத் தவிர, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பென்ஷன் ரூ.8,000-லிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
 அரசுப் பணியில் பல ஆண்டுகள் பணியாற்றி, தனது சம்பளத்தில் ஓய்வூதியத்துக்காக ஒரு சிறு தொகையைச் சந்தாவாகச் செலுத்தி வரும் ஊழியருக்கு ஓய்வூதியம் என்பது நியாயம். அதையேகூட இப்போது ஓய்வு ஊதிய வைப்பு நிதியில் அன்னிய முதலீடு என்கிற பெயரில் முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
 ஆனால், 90 விழுக்காடு எம்.பி.க்கள் வெறும் ஐந்தாண்டுகளுக்கு மட்டுமே இப்பதவியை வகிப்பவராக இருக்கிறார்கள். ஆண்டுக்கு அதிகபட்சம் 180 நாள்கள் மட்டுமே நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் எம்.பி.க்கள்- மாநிலங்களவை, மக்களவை இரண்டிலும்- அமளி ஒத்திவைப்பு நீங்கலாக ""பணியாற்றும்'' நேரம் ஒரு நாளைக்குச் சராசரியாக இரண்டு மணி நேரமாக இருக்கலாம். இதற்கும்கூட அவர் நாடாளுமன்றத்துக்கு வரும் நாள்களுக்குப் படி வழங்கப்படுகிறது. இலவச ரயில் பயணம் உள்ளது. பிறகு எதற்காக ஒரு எம்.பி.க்கு மாதம் ரூ.20 ஆயிரம் பென்ஷன் தர வேண்டும் என்கிற கேள்விக்கு யாரும் பதில் சொல்லத் தயாராக இல்லை.
 ஐந்தாண்டு என்பது ஒரு கட்சியோ, கூட்டணியோ ஆட்சியில் இருக்கும் அதிகபட்ச நாள்கள் தானே ஒழிய, மக்கள் மன்றத்தால் அளிக்கப்பட்டிருக்கும் ஐந்தாண்டுக் குத்தகை அல்ல. உலகளாவிய அளவில் மக்கள் விழிப்புணர்வு அடைந்துவரும் நேரம் இது. "ஊழலுக்கு எதிராகப் போராட்டம்' என்று அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது மக்கள் மன்றத்தில் ஏற்பட்ட எழுச்சி, எந்த அளவுக்கு மக்கள் அரசியல்வாதிகளின் பித்தலாட்டத்தால் மனதிற்குள் கொதித்துப் போய் இருக்கிறார்கள் என்பதைப் படம்பிடித்துக் காட்டியது.
 ஒருவர், இருவர் என்று தொடங்கி ஒரு லட்சம் பத்து லட்சமாகி மக்கள் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கிவிட்டால், ஆட்சியில் இருப்பவர்களின் கதி அதோகதிதான் என்பதை உணர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும், பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களும், ஆட்சியில் இருப்பவர்களும் நடந்து கொண்டால் நல்லது.
பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளாவிட்டால், மக்கள் பொறுமை இழப்பார்கள். இந்தியாவில் மக்களுக்குப் பஞ்சமில்லை, ஜாக்கிரதை!  

நன்றி - தினமணி

Read more...

புதிய மொழி நமக்கு ஒரு கூடுதல் தகுதியே.


மனித நாகரீக வளர்ச்சியில்உலகளாவிய சமூகத் தொடர்புகளில் மொழியே முதன்மையான இடம்பெறுகிறது.
ஒருவருக்கு எத்தனை மொழிகள் தெரிகிறதோஅந்தளவிற்கு அவரின் வெற்றி சமூகத்தில் உறுதிசெய்யப்படுகிறது. அன்றிலிருந்து இன்றுவரைவேற்று மொழிகளை கற்கும் ஆர்வம் உலக மக்களிடையே அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் அபரிமித விஞ்ஞான வளர்ச்சியும்உலகளாவிய பொருளாதார தாராளமயமாக்கலும் வேற்றுமொழி பயிலும் ஆர்வத்தை தூண்டுவதோடுஅதன் அவசியத்தையும் அதிகரிக்கின்றன.

பல மொழிகள் தெரிந்து வைத்திருக்கும் ஒருவர்,

பலவித கலாச்சாரங்களை எளிதில் அறிந்துகொள்ள முடிவதோடுபுதிய புரிந்துணர்வுகளை மேம்படுத்திக்கொள்ள முடியும். 
மற்ற மக்களின் சட்ட-திட்டங்களை தெளிவாக தெரிந்துகொள்ள முடியும். 
கற்றல் திறன் மற்றும் விசால மனப்பான்மையை மேம்படுத்திக்கொள்ள முடியும். 
சர்வதேச பயணங்களை சுதந்திரமாகவும்தடையின்றியும்மகிழ்ச்சியாகவும் மேற்கொள்ள முடியும். 
வேறு நாட்டு மக்களுடன் அவர்களின் மொழியிலேயே உரையாடுவதால்அவர்களது அன்பையும்நன்மதிப்பையும் பெற முடியும். 
வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் எளிதாக இடம்பிடிக்க முடியும். 
பல நாட்டு நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகளை படித்து பயன்பெற முடியும்.

 இத்தகைய பரந்தளவிலான பயன்களோடுஅதிக சம்பளம் பெறக்கூடிய பல வேலைவாய்ப்புகளையும் பெறலாம்.
 அவை,
 வெளிநாட்டு தூதர்கள் 
மொழிபெயர்ப்பாளர்கள் 
சுற்றுலா வழிகாட்டிகள் 
விமான பணிப்பெண்கள் 
ஹோட்டல் வரவேற்பாளர்கள்
 * பயண மேலாளர்கள் 
சர்வதேச நிறுவனங்களில் பொதுமக்கள் தொடர்பு அதிகாரிகள் 
மொழி ஆசிரியர்கள் 
விளம்பர பணியாளர்கள் 
சர்வதேச சந்தை பணியாளர்கள் 
போன்றவை.

பொதுவாக வெளிநாட்டு மொழி என்றாலே ஆங்கிலம் தான் நமக்கு முதலில் நினைவுக்கு வரும். ஆங்கிலத்தை கற்றுக்கொண்டாலே உலகளவில் அனைத்தையும் சமாளித்து விடலாம் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. ஆனால் அது தவறு. ஏனெனில் உலக மக்கள் தொகையில் ஆங்கிலம் தெரிந்தவர்களின் எண்ணிக்கை 25% -க்கும் குறைவாகவே இருக்கிறது.

சீனாகொரியாஜப்பான் உள்ளிட்ட பல ஆசிய நாடுகள்பல தென்அமெரிக்க நாடுகள்ஐரோப்பாவின் பல நாடுகள்ஆப்ரிக்காவின் பல நாடுகள் போன்றவற்றில் ஆங்கிலத்தை வைத்து சமாளிக்க முடியாது. மேலும் அதுபோன்ற நாடுகளின் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு,அந்நாட்டு மொழியறிவை சோதிப்பதற்கான தகுதித்தேர்வில் நீங்கள் தேறியாக வேண்டும். இதன்மூலம் ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகளின்   முக்கியத்துவம் நமக்கு தெரியவருகிறது. அதேசமயம் ஒவ்வொருவரும் ஆங்கிலத்தையும் ஒரு வெளிநாட்டு மொழியாக தெரிந்துவைத்திருப்பது வாழ்வில் இன்றியமையாத ஒன்று என்பதை மறந்துவிடக்கூடாது.
 
புதிய மொழியைக் கற்றல்: இந்தியாவில் பலரும் குறைந்தபட்சம் அல்லது மொழிகளை பேசுகிறார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் தெரிந்திருப்பதுஇன்னொரு புதிய மொழியை கற்றுக்கொள்வதை எளிமையாக்கும். புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வதில் அனைவருமே வல்லவர்கள் அல்ல. சிலர் விரைவாகவும்எளிதாகவும் கற்றுக்கொள்வார்கள். சிலருக்கு தாமதமாகலாம். ஆனால் அனைத்திற்கும் மூலகாரணம் முயற்சியும்ஆர்வமும்தான்.


ஒரு மொழியின் வார்த்தைகள்வாக்கிய அமைப்புகள்இலக்கணம் போன்ற அம்சங்களில் எப்போதுமே ஆர்வம் இருக்க வேண்டும். மேலும் பிறர் பேசுவதை ஆர்வத்துடன் கவனிப்பது மிகவும் முக்கியம். புதிய வார்த்தைகளுக்கான அர்த்தங்களை விடாமல் முயற்சிசெய்து தெரிந்துகொள்வதுஅம்மொழியிலுள்ள புத்தகங்களை தொடர்ந்து படிப்பதுஅம்மொழி பேசும் நபர்களுடன் ஆர்வமுடன் அடிக்கடி உரையாடுவதுபொறுமையுடன் கூடிய விடாமுயற்சி போன்றவை ஒரு புதிய மொழியில் உங்களை வல்லவராக்கும்.

மேலும் ஒரு மொழியை கற்பதில் உங்களின் திறனை சோதிக்க எம்.எல்.ஏ.டி.(நவீன மொழி திறனாய்வு தேர்வு) போன்ற தேர்வுகள் உள்ளன. நாம் ஏற்கனவே கூறியதுபோல்தங்களின் தாய்மொழியை மட்டுமே தெரிந்த நபர்களைவிடநம்மைப் போன்றவர்கள் புதிய மொழியை விரைவாகவும்எளிமையாகவும் கற்றுக்கொள்ள முடியும். அது நமக்கு ஒரு கூடுதல் தகுதியே. எனவே இப்போதே முயற்சியை தொடங்குங்கள்.

Read more...

மக்களின் கோபத்திற்கும்,சாபத்திற்கும் ஆளாகும் ஆள்வோர்

25 November 2011

Clcick - முஸ்லீம் பெண்களை ஏமாற்றுவது ஏன்
இந்த ஆண்டின் தொடக்கம் முதலாகவே, கார், இரு சக்கர வாகனங்கள் விற்பனை சென்ற ஆண்டைக் காட்டிலும் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது. இந்த விற்பனை 2009-ம் ஆண்டைக் காட்டிலும் 25 சதவீதம் அதிகம்.
இன்றியமையாப் பொருள்களின் விலை உயர்வதற்கு முக்கிய காரணம் வாகனக் கட்டணம் உயர்வதுதான். ஆனால், இந்தியாவில் சரக்கு வாகனங்களின் விற்பனை மிகக் குறைவாக இருக்கிறது. கார்கள், இரு சக்கர வாகனங்களின் விற்பனை மிக அதிகமாக இருக்கிறது. சரக்கு வாகனங்களால் செலவாகும் பெட்ரோலியப் பொருள்களைவிட, மிக அதிகமாக பெட்ரோல் டீசல் கார்களுக்கும் இரு சக்கர வாகனங்களுக்கும்தான் பெட்ரோலியப் பொருள்கள் செலவாகின்றன.
இந்தியாவில் அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, நகரச் சாலைகளின் 41 விழுக்காட்டை கார், பைக் நிறுத்துமிடம் ஆக்கிரமித்துக் கொள்கிறது எனத் தெரியவந்துள்ளது. நகரங்களில் பாதிக்கும் மேற்பட்ட கார்களை நிறுத்த வீட்டுக்குள் இடமில்லாததால் தெருவை ஆக்கிரமித்து நிறுத்தியிருக்கிறார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. பெருநகரங்களில் வாகனங்கள் சிக்னலுக்காகக் காத்திருக்கும்போது வீணாகும் பெட்ரோல் அளவு, தில்லியில் மட்டும் ஆண்டுக்கு 30 லட்சம் லிட்டர் என்று மதிப்பிடப்படுகிறது. இதனால் நாட்டுக்கும் வீட்டுக்கும் ஒருசேர இழப்புதான்.
சீனாவில், ஷாங்காய் நகரில் ஒரு நடைமுறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். கார் உரிமம் (லைசென்ஸ் பிளேட்) ஏலம் விடப்படுகிறது. ஒரு கார் லைசென்ஸ்பெற  குறைந்தது ரூ.2.75 லட்சம் ஆகிறது. அதாவது, ஒரு காரின் விலை! ஆகவே, கார்கள் வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்து, சைக்கிள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
 
ஷாங்காய் நகரில் சைக்கிள் ஓட்டுவோர் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கு அரசே சில நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையத்திலும் சைக்கிள்கள் நூற்றுக்கணக்கில் நிறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களுக்கான அடையாள அட்டையைக் கணினியில் தேய்த்துவிட்டு சைக்கிள்களை எடுத்துச்சென்று, தங்கள் பணிமுடிந்தவுடன், வேறு ரயில்நிலையமாக இருந்தாலும்கூட, அங்கே நிறுத்திவிட்டுச் சென்றுவிடலாம்.
இப்போது இந்தியாவில் புனே நகரம் (ஒரு காலத்தில் சைக்கிள் நகரம் என்ற பெயர் பெற்ற ஊர்) தற்போதைய வாகன நெரிசலைத் தாங்கமுடியாமல், மீண்டும் தனது பழம்பெருமையை நிலைநாட்டும் நடவடிக்கையாக, 20,000 சைக்கிள்களை சாலைகளில் இறக்கிவிட்டு, குறைந்த வாடகையில் மக்கள் பயன்படுத்தும்படி ஏற்பாடுகள் செய்து வருகிறது. சிங்கப்பூரிலும் சீனாவில் இருப்பது போல கார் உரிமம் பெறக் கட்டணம் உண்டு. அந்த நகரின் முக்கிய வீதிகளில் சொந்த வாகனங்களில் பயணம் செய்ய மிக அதிகமான சுங்கக் கட்டணம் வீதிக்கு வீதி வசூலிக்கப்படுகிறது. மிகக் குறைந்த பயணக் கட்டணத்தில் எல்லா வசதிகளுடனும் கூடிய பொதுப் போக்குவரத்து உலகின் பல நாடுகளிலும் இயக்கப்படுவது தனியார் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்காகத்தான்.
ஜப்பான் உள்ளிட்ட கீழ்திசை நாடுகளில் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளிலும் கூட கோட்டும் சூட்டும் அணிந்து சைக்கிளில் பயணிப்பவர்கள் பலர். அதை ஒருவரும் கெüரவக் குறைவாகக் கருதுவதில்லை. அதற்குச் சுற்றுச்சூழல் பற்றிய அக்கறையில் பெட்ரோல் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும் என்கிற பொறுப்பும்தான் காரணம்.
 பல நாடுகள் பெட்ரோலிய சிக்கனத்தைக் கருத்தில் கொண்டும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் மக்களின் மோட்டார் வாகன மோகத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிக்கு முன்னுரிமை கொடுக்கின்றன. அரசு சார்பில் போதுமான அளவு பொதுப் போக்குவரத்தை குறைந்த கட்டணத்தில் இயக்குகிறார்கள். நாமோ அதைப் பின்பற்றாமல் மோட்டார் வாகன உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுவதுதான் விசித்திரத்திலும் விசித்திரம்.

தரமான பேருந்துகள் கிடையாது. முறையாக எல்லா பகுதிகளையும் இணைக்கும் "மெட்ரோ' வசதி கிடையாது. அப்படியே இருந்தாலும் அதிகமான கட்டணம். சொகுசுப் பேருந்து, விரைவுப் பேருந்து என்று காரணம் கூறி கட்டணங்களை உயர்த்தி, போக்குவரத்துத் துறை மக்களின் கோபத்தையும் சாபத்தையும் வாங்கிக் கொள்கிறதே தவிர பொதுமக்களின் நலனுக்காக வாகனங்கள் இயக்கப்படுவதில்லை. தொலைதூரப் பயணத்துக்கான விரைவுப் பேருந்துகளும் தரமற்றவையாக இயக்கப்பட்டு மறைமுகமாக தனியார் "ஆம்னி' பஸ் உரிமையாளர்களுக்கு உதவி செய்வதில்தான் கருத்தாய் இருக்கின்றன.
முறையான பொதுப் போக்குவரத்து இல்லாமை ஒரு குறை என்றால், மக்களின் தேவையைப் பூர்த்தி செய்கிறோம் என்ற பெயரில், வங்கிக் கடன்களை வாரி வழங்கி தனியார் மோட்டார் வாகன உற்பத்தியாளர்களுக்குத் துணைபோவது அரசின் இன்னொரு மாபெரும் மோசடி. நடுத்தர வர்க்கத்தினரைக் கடன்காரர்களாக்கி நடுத்தெருவில் நிற்க வைத்திருப்பதுதான் மிச்சம். மோட்டார் வாகனங்களின் விற்பனை அதிகரித்திருப்பதால் யாருக்கு லாபம்? கடன் கொடுத்த தனியார் வங்கிகளுக்கும் வாகன உற்பத்தியாளர்களுக்கும் தானே தவிர, பெட்ரோலியப் பொருள்களுக்கு அந்நிய செலாவணியை விரயமாக்கும் அரசுக்கோ, வாங்கும் சம்பளத்தில் கணிசமான பகுதியை வட்டியாகவும் தவணையாகவும் பெட்ரோலுக்காகவும் செலவிடும் பொதுமக்களுக்கோ என்ன லாபம்?
இனியும்கூட, கார்கள், இரு சக்கர வாகனங்கள் பயன்பாட்டை அரசு கட்டுப்படுத்த வேண்டாமா? கார்கள் வைத்திருக்க வேண்டுமானால், அவர்களுக்கு நிபந்தனைகளையும், அவர்களுக்கான பெட்ரோல் விலையையும் கூடுதலாக நிர்ணயிக்க வேண்டாமா? வரம்பில்லாமல் வாகனங்களுக்குக் கடன் வழங்குவது தடுக்கப்பட வேண்டாமா? எல்லாவற்றுக்கும் மேலாக, நஷ்டமானாலும் பரவாயில்லை என்று பொதுப் போக்குவரத்துத் துறையில் குறைந்த கட்டணத்தில் கூடுதல் வாகனங்கள் மக்களின் தேவைக்கு ஏற்ப இயக்கப்பட வேண்டாமா?

Read more...

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

Blog Archive

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP