குழந்தைகளின் கற்கும் திறன் பாதிப்பது ஏன்

26 October 2010

குழந்தைகளுக்கு உடலில் நான்கு மடங்கு

கலோரிசத்து இழப்பு ஏற்படுகிறது

மற்ற விளையாட்டுகளை விட, வீடியோ கேம் விளையாடும் போது குழந்தைகளுக்கு உடலில் நான்கு மடங்கு கலோரிசத்து இழப்பு ஏற்படுகிறது; அதே நேரம், இதய "லப் டப்" துடிப்பும் அதிகரிக்கறது. ஹாங்காங் பல்கலைக்கழக மனித நடவடிக்கைகள் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது. வீடியோ கேம் விளையாடும் குழைந்தைகளின் உடல் நிலை பலவகையில் பாதிக்கபடுகிறது. ஆறு முதல் 12 வயதுவரை உள்ள குழைந்தைகள் வீடியோ கேம் விளையாடும் போது, அவர்கள் இதயத் துடிப்பு அதிகரிக்கறது;
அவர்களின் உடலில் கலோரி வெப்ப ஆற்றல், வழக்கத்துக்கு மாறாக நான்கு மடங்கு குறைகிறது. ஐந்து நிமிட நேரம் வீடியோ கேம் விளையாடினாலே இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

1 நிமிடத்துக்கு 39 விழுக்காடு கலோரி எரிக்கபடுகிறது. மற்ற விளையாட்டுகளில் குழைந்தைகளுக்கு பாதிப்பும் இல்லை; அதே நிலையில் அவர்களின் உடல் நலத்திற்கும் உதவுகின்றன. மற்ற விளையாட்டுகளில் குழைந்தைகளின் கலோரி எரிப்பு வெறும் 0.6 விழுக்காடுதான். குழந்தைப்பருவத்தில் உடல் வளர்ச்சிக்கு உடலில் கலோரி சத்து அதிகமாக தேவை. கிரிக்கெட்,கால்பந்து,டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் கலோரி மிக குறைவாகவே இழப்பு ஏற்படுகின்றது. வீடியோ கேம் விளையாடும்போது,பதட்டம் அதிகரிக்கிறது; மன அழுத்தம் அதிகமாகிறது. இதனால் குழைந்தைகளின் இதயத் துடிப்பும் இரண்டு மடங்கு மேல் அதிகமாகிறது. இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.


டிவி பார்ப்பது குழந்தைகளின் கற்கும்

திறனைப் பாதிக்கிறது.

அமெரிக்காவின் சியாட்டிலில் வாஷிங்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ஆய்வில் கூறியிருப்பதாவது: குழந்தைகளின் கற்கும் திறனானது வீட்டில் உள்ள பெரியவர்கள் பேசுவதைக் கேட்பதால் இயல்பாக வளரக்கூடியது. இந்த இயல்பான வளர்திறனானது சமீப காலத்தில் மிகவும் குறைந்து காணப்படுகிறது. இதற்குக் காரணம் வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளிடம் நேரம் ஒதுக்கிப் பேசாமல் டிவி பார்ப்பதிலேயே அதிக நேரம் செலவிடுவதுதான் எனத் தெரியவந்துள்ளது.

2 மாதம் முதல் 3 வயது வரை உள்ள 329 குழந்தைகளிடம் ஆய்வு நடத்தியதில் குழந்தைகளுக்கு டிவி சத்தம்தான் அதிக பரிச்சயமானதாகத் தெரிகிறது. இது மட்டுமல்லாமல் பெரியவர்களிடம் பேசுவதற்கும், பெரியவர்களின் பேச்சை கேட்பதற்கும் குறைவான வாய்ப்பு அமைவதால் குழந்தைகளின் பேச்சுத் திறனும் பாதிக்கப்படுகிறது. டிவி பார்க்காத குழந்தைகளின் கற்கும் திறன் அதிகமாகவும், டிவி பார்க்கும் குழந்தைகளின் கற்கும் திறன் குறைவாகவும் உள்ளது. இதே போன்று மாசசூùஸட்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்விலும் பெற்றோர்கள் குழந்தைகளிடம் குறைந்த நேரமே செலவிடுகின்றனர். இதனால் குழந்தைகளின் கற்கும் திறன் குறைகிறது எனத் தெரியவந்துள்ளது. இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் டிவி பார்ப்பதன் மூலம் பேசக் கற்றுக் கொள்கிறார்கள். இது அவர்களின் வளர்ச்சிக்கு ஏற்புடையது அல்ல. குழந்தைகளுக்கு 3 வயது முடியும் வரை பெற்றோர்கள் டிவி பார்ப்பதைக் குறைத்துக் கொண்டு அவர்களுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். குழந்தைகள் அதிக நேரம் டிவி பார்ப்பதைப் பெற்றோர்கள் தடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் குழந்தைகளின் கற்கும் திறன் மேம்படக்கூடும் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Read more...

பணப்பேய்களின் கூடாரம் ?

22 October 2010

ஒரு ஆங்கில மாதஇதழின் ஆசியப் பதிப்பில் வெளியான செய்தி, ""94 சதவீத டாக்டர்கள் மருந்துக் கம்பெனிகள் தரும் பரிசுப் பொருள்களை வாங்கிக்கொண்டு, அவர்கள் சொல்லும் மருந்துகளை நோயாளிக்கு எழுதித் தருகிறார்கள்'' என்று சொல்கிறது.

முன்பெல்லாம், மருத்துவர்கள் எழுதித் தரும் மருந்துகளை நோயாளிகள் கடைகளில்தான் வாங்கி வந்தனர். இப்போதெல்லாம் பெரும்பாலான டாக்டர்கள் தங்களிடமே மருந்தை வாங்கச் சொல்கிறார்கள். அவர்களே மருந்துக் கடை நடத்துகிறார்கள். இதற்குக் காரணம் மருந்து நிறுவனங்கள் டாக்டர்கள் மனதில் விதைத்திருக்கும் விஷ விதைதான்.

"மருந்தை நீங்களே விற்கலாமே', "ஸ்கேன் இயந்திரத்தை நீங்களே வாங்கிப் போட்டுக்கொள்ளலாமே', "இசிஜி நீங்களே வைத்துக் கொள்ளலாமே' என்று ஒவ்வொரு கருவியாகக் கொண்டுவந்து திணிக்கிறார்கள். அவர்களே அதற்கான தவணையைத் தீர்மானிக்கிறார்கள். போட்ட முதலையும் நூறு சதவீத லாபத்தையும் இரு ஆண்டுகளில் பெறுவது எப்படி, அதற்கு ஒரு நாளைக்கு எத்தனை நோயாளிகளை கட்டாயமாக இந்தக் கருவியின் பயன்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும், எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அட்டவணை போட்டுத் தருகிறார்கள்.

இன்றைய மருத்துவச் செலவு அதிகரிப்பதற்கு மிக முக்கியமான காரணம் கொள்ளை லாபம் அடையும் மருந்து தயாரிப்பு மற்றும் மருத்துவக் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்கள்தான்.

அரசு மருத்துவமனைக்கு விற்கப்படும் ஒரு பாராசிட்டமால் விலை அதிகபட்சம் 10 காசுகள்தான். ஆனால் மருந்துக் கடைகளில் இதன் விலை ஒரு ரூபாய்க்குக் குறையாது. இதே நடைமுறைதான் எல்லா வகை மருந்துகளிலும்!. ஒரே அடிப்படை மூலக்கூறினை இவர்கள் வெவ்வேறு பெயர்களில் மாற்றி, மாற்றிப் பெயர் வைத்து விற்க இந்திய அரசு அனுமதிக்கிறது. அது போதாதா? புதிய புதிய பெயர்களில் மருந்துகளை வேறு சில மூலக்கூறுகளைச் சேர்த்து, அல்லது நீக்கித் தயாரித்து, அதையே நோயாளிக்கு எழுதித் தரும்படி மருத்துவர்களை வசியம் செய்கிறார்கள்.

இதற்காக மருத்துவர்களுக்குப் பரிசுகள் தரப்படுகின்றன. மாதம் ஒருமுறை ஓய்வான சந்திப்பு என்ற பெயரில் விருந்து கொடுக்கிறார்கள். சில நேரங்களில் மருத்துவர் சங்க மாதாந்திரக் கூட்டச் செலவு, கருத்தரங்கச் செலவு, பயிற்சிமுகாம் செலவு ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இது மட்டுமா? ஊட்டி, கொடைக்கானல் போன்ற கோடைவாசஸ்தலங்களில் ரிசார்ட்களை ஆண்டு முழுமைக்கும் வாடகைக்கு எடுத்து, அவர்களை குடும்பத்துடன் வந்து தங்கியிருக்கச் செய்யும் சேவையையும் இந்த மருந்து நிறுவனங்கள் செய்கின்றன.

""டாக்டர் சார், ஒரு ஆஞ்சியோகிராம் செய்து பாத்துடுவோமா?'' என்று நோயாளியே கேட்டாலும், ""தேவையில்ல, ரெண்டு மாடி சிரமமில்லாம ஏறி வர முடியுதே, உங்களுக்கு ஒண்ணுமில்ல'' என்று சொன்ன மருத்துவர்கள் வாழ்ந்த இந்திய மருத்துவ உலகை, பணப்பேய்களின் கூடாரமாக்கிய பெருமை இந்த மருந்து நிறுவனங்களுக்கே உரித்தானது. மருத்துவ உலகின் மோசமான வைரஸ்- மருந்து, மருத்துவக் கருவி தயாரிக்கும் நிறுவனங்கள்தான்.

இந்தியாவில் ஏழைக்கும் ஏற்கும் வகையில் மருத்துவச் செலவை குறைக்க வேண்டும் என்றால், இத்தகைய லஞ்சம் கொடுப்பதில் ஈடுபடும் மருந்து நிறுவனங்களின் அனைத்து குறுக்குவழிகளையும் அடைத்து, இவர்களது லாபவெறிக்கு விலங்கு போட்டால்தான் முடியும்.

லஞ்சம் கொடுத்த மருந்து நிறுவனங்களின் பெயர்களும், அவர்களது பிரதிகளின் பெயரும் தெரிவிக்கப்பட்டபோதிலும் ஊடகங்கள் அதைப் பெரிதுபடுத்தவில்லை என்பதும், அரசும் இந்த மருந்து நிறுவனங்களின் மற்ற வியாபாரம், இவர்கள் ஏற்கெனவே விநியோகிக்கும் மருந்துகளின் தரம் ஆகியவற்றை உடனடியாக ஆய்வு செய்யாதிருப்பதும்தான் ஏமாற்றம் அளிக்கிறது.

வரிஏய்ப்பு, கடத்தல், போலிச் சான்றிதழ் போன்ற லஞ்ச ஊழல்களில் நாட்டின் வருவாய்க்கு கேடு விளையும். சில விஷயங்கள் நாட்டின் பாதுகாப்புக்குக் குந்தகமாக அமையும். ஆனால் உணவுக் கலப்படம், மருந்துகளில் லஞ்ச ஊழல் என்பது அப்பாவி மக்களின் உயிருக்கே கேடு விளைவிக்கும். இந்த மிகக் கொடிய செய்கையை இந்தியாவில் நிகழ்த்திக் கொண்டிருப்பவை பெரும்பாலான மருந்து நிறுவனங்கள்தான். இவர்களை அரசு எந்த அளவுக்குக் கண்காணித்து, கட்டுக்குள் வைக்கிறதோ அந்த அளவுக்கு மக்களின் மருத்துவச் செலவும் குறைவாக இருக்கும்.





Read more...

இது ஏன், எதனால் ?

21 October 2010

சிலர் மிக மிக நன்றாகப் படிப்பார்கள். நிறைய மதிப்பெண்கள் எடுப்பார்கள். எப்போது பார்த்தாலும் புத்தகமும் கையுமாக இருப்பார்கள். ஆனால் கேம்ப்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகமாட்டார்கள். ஆனால் சிலர் சுமாராகப் படிப்பார்கள். எல்லாரிடமும் கலகலவென்று பேசுவார்கள். ஏதோ தேர்வுகளில் வெற்றி பெறும் அளவுக்கு மதிப்பெண்கள் எடுப்பார்கள். ஆனால் கேம்ப்பஸ் இண்டர்வியூக்களில் தேர்வாகி வேலைக்குப் போய்விடுவார்கள்.

""இது ஏன்?'' எதனால் ?""மாணவர்களை மட்டுமல்ல, மனிதர்களை நாம் இரண்டு பிரிவாகப் பிரித்துவிடலாம். கூச்ச சுபாவமுடையவர்கள், தயக்கமின்றிப் பழகுபவர்கள் என்று இரு பிரிவாகப் பிரித்து விடலாம்.

மாணவர்களில் கூச்ச சுபாவமுடையவர்கள் எப்போது பார்த்தாலும் படித்துக் கொண்டே இருப்பார்கள். பிறரிடம் சகஜமாகப் பேசிப் பழகமாட்டார்கள். அப்படியே பேசும்படி நேர்ந்துவிட்டால் ஏதோ ஓரிரு வார்த்தைகளை மட்டும் பேசிவிட்டு ஓடிவிடுவார்கள்.

தனியாக இருக்கும்போது பாட்டுக் கேட்டுக் கொண்டோ, கம்ப்யூட்டரில் ஏதாவது செய்து கொண்டோ இருப்பார்கள். தானுண்டு தன் புத்தகங்களுண்டு என்று இருக்கும் இவர்கள், பிறரிடம் பேசுவதற்கே பயப்படுவார்கள். ஏதாவது தப்பாகப் பேசிவிடுவோமா? என்று நினைப்பார்கள். அதிலும் மாணவிகளாக இருந்தால் இன்னும் கூச்சப்படுவார்கள். பாடம் தொடர்பான எல்லாவற்றிலும் இவர்களை யாராலும் அடித்துக் கொள்ளவே முடியாது.

செய்முறைத் தேர்வுகளில் கூட நல்ல மதிப்பெண்கள் எடுத்துவிடுவார்கள். ஆனால் கேம்ப்பஸ் இண்டர்வியூவில் சரியாகப் பதில் சொல்லமாட்டார்கள். பதட்டப்படுவார்கள். இண்டர்வியூவில் கேட்கும் கேள்விகளுக்குத் தவறாகப் பதில் சொல்லிவிடுவோம் என்ற நினைப்பிலேயே தவறாகப் பதில் சொல்லிவிடுவார்கள்.

எவ்வளவுதான் நன்றாகப் படித்திருந்தும், எவ்வளவுதான் நிறைய மதிப்பெண்கள் எடுத்திருந்தும் கடைசியில் கேம்ப்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகாமல் மனம் இடிந்து போய்விடுவார்கள். ஆனால் எல்லாரிடமும் தயக்கமின்றிப் பழகும் மாணவர்கள் படிப்பிலோ வெகு சுமார்தான். இன்னும் சொல்லப் போனால் தேர்வுக்கு முதல் வாரம் வரை பாடப் புத்தகங்களைக் கண்ணிலேயே பார்த்திருக்கமாட்டார்கள். கடைசி நேரத்தில் மிகவும் குறைந்த அளவு பாடங்களைத் தேர்வு செய்து படித்து, தேவையான மதிப்பெண்களை எடுத்துவிடுவார்கள். இதில் சில மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் கூட எடுத்துவிடுவார்கள்.

ஆனால் படிப்பைத் தவிர, பிறவற்றைப் பற்றிக் கேட்டுப் பாருங்களேன். நாக்கு நுனியில் பதில்களை வைத்திருப்பார்கள். இலக்கியம், அரசியல், விளையாட்டு, கலை, சினிமா, கம்ப்யூட்டர், தொழில்நுட்பம் என்ற எல்லாவற்றைப் பற்றியும் தெரிந்து வைத்திருப்பார்கள். புதிய புதிய செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமிருக்கும்.

இதனால் பொது அறிவு அதிகமாக இருக்கும். எல்லாரிடமும் கலகலவென்று பேசிப் பழகுவதால் நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான பல விவரங்கள் எப்போதும் இவர்களைத் தேடி வந்து கொண்டே இருக்கும். அதனால் யாரிடமும் எந்த விஷயத்தைப் பற்றியும் பேசுவதில் இவர்களுக்குத் தயக்கமெதுவும் இருக்காது.

எனவே கேம்ப்பஸ் இண்டர்வியூவில் கேட்கும் கேள்விகளுக்குத் தைரியமாக எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் பதில் சொல்வார்கள். வேலை வாய்ப்பையும் எளிதில் பெற்றுவிடுவார்கள். கூச்ச சுபாவமுள்ள மாணவர்கள் வேலை வாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற சில பயிற்சிகள் செய்யலாம்.

கூச்ச சுபாவமுள்ள மாணவர்களை இரண்டு பிரிவாகப் பிரித்து, ஒரு பிரிவில் உள்ளவர்களை வேலை தருபவர்களாக பயிற்றுவிக்கச் சொல்லலாம். இன்னொரு பிரிவில் உள்ளவர்களை வேலை தேடிச் செல்பவர்களாக பயிற்றுவிக்கலாம்.

வேலை தருபவர், தனக்கு - இந்த வேலைக்கு - இந்த மாதிரியான தகுதிகள் உடைய நபர்கள் - தேவை என்ற முடிவுடன் வேலைக்கான நபரைத் தேர்வு செய்வார். அதை வேலை தருபவர்களாக இருப்பவர்கள் தங்களுக்குள் கலந்து பேசி என்ன கேள்விகள் கேட்பதென்று முடிவு செய்து கொள்ள வேண்டும்.

அதுபோல வேலை தேடிச் செல்பவர் தனக்கு இந்த இந்தத் தகுதிகள் உள்ளன, வேலை தருபவரின் தேவைக்கேற்ற திறமைகள் இவை இவை என்னிடம் உள்ளன என்று தன்னைப் பற்றிய தன் மதிப்பீடு செய்து கொண்டு நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளும்படி கூறலாம்.

இந்த நேர்முகத் தேர்வு நடந்து, சிறிது நேரம் கழித்து, வேலை தேடிச் செல்பவர் வேலை தருபவராகவும், வேலை தருபவர் வேலை தேடிச் செல்பவராகவும் மாறி மாறி செய்து பார்க்கலாம்.

இந்த பயிற்சி முறையின் மூலம் வேலை தேடிச் செல்பவர், வேலை தருபவர் ஆகிய இருதரப்பினரின் தேவைகள், விருப்பங்கள், வேலை தேடிச் செல்பவர் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறமைகள், நேர்முகத் தேர்வில் பதிலளிக்கும் முறை, நடந்து கொள்ள வேண்டிய முறைகள் என நிறைய விஷயங்களை நடைமுறையில் தெரிந்து கொள்வார்கள். வேலைக்குச் செல்ல விரும்பும் தனக்கு உள்ள திறமைகள் போதுமா? எந்தத் திறனில் குறையுள்ளது? எவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்? என்பவை எல்லாம் இந்தப் பயிற்சியின் மூலம் கூச்ச சுபாவமுள்ள மாணவர்களுக்கு உணர்த்தப்பட்டுவிடும்.

இதுதவிர, நேர்முகத் தேர்வுகளில் எப்படியெல்லாம் கேள்விகள் கேட்பார்கள்? அறிவுத்திறனைத் தெரிந்து கொள்ள எப்படிக் கேள்விகள் கேட்பார்கள்? நேர்முகத் தேர்வில் பங்கேற்கும்போது எப்படி உடை உடுத்த வேண்டும்? எப்படி நடக்க வேண்டும்? வேலை தேடிச் செல்பவர் தனக்குத் தேவையான சம்பளம் எவ்வளவு என்பதை எப்படிப் பணிவாக வேலை தருபவரிடம் கேட்க வேண்டும்? என்பன போன்ற பல விவரங்களையும் இந்தப் பயிற்சிகளின் மூலம் செய்து பார்த்துக் கொண்டு சென்றால் இன்னும் சுலபமாகிவிடும்.

எந்தவொரு நிறுவனமும் தனக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க, வேலை தேடி வருபவரிடம் வேலை தொடர்பான அறிவு, திறமை, நல்ல நேர்மறையான அணுகுமுறை, தன்னம்பிக்கை இருக்கிறதா என்றுதான் பார்ப்பார்கள். கூச்ச சுபாவமுள்ளவர்கள் இவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறரிடம் பழகுவதில் உள்ள தயக்கத்தை விட்டொழிக்க வேண்டும். அப்படிச் செய்தால் வேலைக்கான நேர்முகத் தேர்வுகளில் வெற்றி நிச்சயம் '' இன்ஷாஅல்லாஹ்..


Read more...

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP