பாசத்துக்காகவும், அரவணைப்புக்காகவும் ஏங்கும் நிலை

30 July 2011


திருமண விழா ஒன்றில் பங்கேற்கச் சென்றபோது அங்கு ஒரு துண்டுப் பிரசுரத்தை அளித்தார்கள். ஏதோ வாழ்த்து மடல் என்றெண்ணிப் படித்தபோதுஇன்றைய பெற்றோர் பலரின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. அது இதுதான்.
என் அருமை மகனேமகளேநான் முதுமையால் தள்ளாடும் நாள்களில்நான் உண்ணும்போதுஉடை அழுக்கானால்.. நான் உடையணிய முடியாதிருந்தால்..
பொறுமையைக் கடைப்பிடி. நீ குழந்தையாய் இருந்தபோதுஅவற்றைக் கற்றுத் தர நான் செலவிட்ட பல மணி நேரங்களை எண்ணிப் பார்.
நான் குளிக்க விரும்பாதபோது என்னை அவமானப்படுத்தாதேகோபித்துக் கொள்ளாதேஉன்னைக் குளிப்பாட்ட ஆயிரம் கற்பனைக் காரணங்களைச் சொல்லி உன் பின்னால் ஓடி வந்த நாள்களை நினைத்துப்பார்.
சொன்னதையே திரும்பத் திரும்ப நான் சொன்னாலும்அதைக் கவனித்துக் கேள். உனக்குத் தூக்கம் வரும்வரை திரும்பத் திரும்ப ஒரே கதையைச் சொன்னது நானல்லவா.
என் கால்கள் தளரும்போது உன் கரங்களால் என்னைத் தாங்கு. நீ நடை பழக என் கரங்கள் உன் பிஞ்சுப் பாதங்களைத் தாங்கி நின்றதை அப்போது நினைத்துக்கொள்.
மறதி என்னை ஆட்கொள்ளும்போதெல்லாம் என்னிடம் சிடுசிடுக்காதே. என் உரையாடலைவிடநான் உன்னுடன் இருப்பதும்நீ என்னைக் கவனித்துக் கொள்வதுமே முக்கியம்'.
வயதான தாய்தந்தையரைத் தொட்டிலில் அமர்த்தி தனது இரு தோள்களில் சுமந்த   நம் நாட்டில்தான் இந்த ஏக்கப் பெருமூச்சு வார்த்தைகள் உதித்துள்ளன.
இன்று பணமும்பகட்டும் மனிதனின் வாழ்க்கை முறையை மாற்றிவிட்டது.
இதற்காக இன்றைய இளைய தலைமுறையைச் சேர்ந்த கணவன்மனைவி வேலைவாய்ப்பைத் தேடி வெளிநாடுகளுக்கும்வெளிமாநிலங்களுக்கும் செல்லும்  போக்கு அதிகரித்துள்ளது.
தனிக் குடித்தனம் என்ற புதிய சிந்தாந்தம் இன்றைய இளைய தலைமுறை பெண்களிடம் வேரூன்றிவிட்டது. இதனால் கிராமப்புறங்களில்கூட கூட்டுக்குடும்ப வாழ்க்கை மெல்லச் சிதைந்து வருகிறது. இத்தகைய சூழலில் பெற்றோர் வயதான காலத்தில் தனித்து விடப்படும் நிலை உருவாவதைத் தடுக்க முடியவில்லை. ஒண்டுக் குடித்தனம்உல்லாச வாழ்க்கை,
வயதான பெற்றோரின் அறிவுரையை ஏற்க இயலாத மனப்போக்குஅவர்களைப் பராமரிக்க நேரத்தைச் செலவிட மனமின்மை போன்ற காரணங்களால் இன்றைக்கு முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க நாட்டின் கலாசாரச் சீரழிவால்இன்றைக்கு 17 ஆயிரம் முதியோர் இல்லங்கள் அமைக்கப்பட்டு 1.5 கோடி முதியோரைப் பராமரிக்கும் நிலை உருவெடுத்துள்ளது. மேலைநாட்டுக் கலாசாரம் மெல்ல நம்மிடையே பரவும்  நிலையில் இங்கேயும் முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதில் வியப்பில்லைதான்.

இன்றைக்கு நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர் இல்லங்கள் இருப்பினும்அவற்றில் பெரும்பாலானவை லாபநோக்குடனும்விளம்பர நோக்குடனும் பராமரிக்கப்படுபவையாகவே உள்ளன.
இந்நிலையில்தமிழக அரசு மாவட்டம்தோறும் அரசு சார்பில் முதியோர் இல்லங்களை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய நிலை வருவது தலைக்குனிவுதான் இன்றைய தலைமுறைக்கு. வெளிஇடங்களிலும்வெளிநாடுகளிலும் பணம் சம்பாதிக்கக் குடியேறும் இளைய தலைமுறையினர் பலர் ஏனோ தனது பெற்றோரைத் தன்னோடு வைத்துப் பாதுகாக்கத் தவறுகின்றனர்.  இதனால் தனித்துவிடப்படும் பெற்றோர்தனது மகனின்மகளின் பாசத்துக்காகவும்அரவணைப்புக்காகவும் ஏங்கும் நிலை அதிகரித்து வருகிறது.

முதியோர் இல்லங்களில் என்னதான் பராமரித்தாலும்அவற்றை அண்டி வாழும் பெற்றோரின் இறுதிக்காலம் மகிழ்ச்சிகரமாக இருக்க வாய்ப்பில்லை.
செல்ல நாய்க்குட்டியைப் பராமரிக்கவும்பாசத்தைக் காட்டவும் நேரம் ஒதுக்க  முடிந்த இன்றைய தலைமுறையினர் பெற்றோர் விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
இன்றைய இயந்திரமயமான வாழ்க்கைகணவன்-மனைவி கட்டாயம் வேலைக்குச் செல்லும் மனப்போக்குகுழந்தைகளிடம் இருந்து பெற்றோரைப் பிரித்துவிடுகிறது. இதில் இன்றைய தலைமுறை உடனடியாகக் கவனம் செலுத்தியாக வேண்டும். இல்லையெனில்அவர்களும் முதியோர் இல்லங்களை எதிர்காலத்தில் நாட வேண்டியிருக்கும்.

Read more...

அம்மா, இது எனக்கொரு பாடம்

24 July 2011


ன்று கணிதத் தேர்வு. தேர்வு அறையில் அமர்ந்து கணக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தான் அப்துல்லாஹ். கொஞ்சம் படபடப்பாக இருந்தது. அப்துல்லாஹ், கவனமாக எழுது. கணக்கில் நூற்றுக்கு நூறு மார்க் வாங்க வேண்டும்! அப்போதுதான் மேல் படிப்புக்கு எளிதாக இடம் கிடைக்கும்'' என்று எச்சரித்திருந்தார் அப்பா. ""வினாத்தாளைச் சரியாகப் படியுங்கள். பகுதி ஒன்றில் மூன்று வினாக்கள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் இருபது மதிப்பெண். மொத்தம் அறுபது மதிப்பெண். அந்த வினாக்களைப் புரிந்துகொண்டு முதலில் அவற்றிற்கு விடை எழுதுங்கள்'' என்று வகுப்பில் டீச்சர் சொல்லியிருந்ததும் நினைவு வந்தது.

வினாத்தாளை வாங்கியதுமே  அப்துல்லாஹ், அவசரம் அவசரமாக பகுதி ஒன்றைக் கவனித்தான். அறுபது மதிப்பெண்கள். ஏதேனும் மூன்றிற்கு விடை தருக என்று ஐந்து கேள்விகள் கொடுத்திருந்தார்கள்.  அப்துல்லாஹ் படித்தான். ஐந்துமே அவனுக்குத் தெரிந்தவைதான். விரைவாக, முதல் மூன்று கேள்விகளுக்கும் விடை எழுதினான். பிறகு பகுதி இரண்டு. அதில் இருந்த மூன்று கேள்விகளுக்கும் விடை எழுதிவிட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான்.

அம்மா, கணக்கில் நூற்றுக்கு நூறு வரும். எல்லாக் கேள்விகளும் தெரிந்தவையாக இருந்தன. சரியாக பதில் எழுதிவிட்டேன்'' என்று  அப்துல்லாஹ் துள்ளிக் குதித்தான்.
அம்மா, அப்துல்லாஹ்  கேள்வித்தாளைக் கொடு. பகுதி ஒன்றில் மூன்று கணக்குக் கேட்டிருப்பாங்க. மொத்தம் அறுபது மதிப்பெண் என்று போட்டிருக்குமே.'' அதைச் சரியா போட்டுட்டியா?என்று கேட்டார் அப்பா. போட்டாச்சு அப்பா. கேள்வித்தாளிலேயே எழுதி வந்திருக்கேன் பாருங்க.'' ஐந்தாவது கணக்கு போடலியா?''
ஏதேனும் மூன்றுதானே போடச் சொல்லியிருக்காங்க அப்பா! அதுதான் முதல் மூன்று கணக்கையும் போட்டிருக்கேனே!''
கேள்வித்தாளைச் சரியாகப் படித்துப் பார்!'' என்று சற்று கோபமாகச் சொன்னார் அப்பா. அப்துல்லாஹ், வினாத்தாளை வாங்கிப் படித்தான். அவன் முகம் இருண்டது. பகுதி ஒன்றில்,""ஏதேனும் மூன்றுக்கு விடை தருக. வினா எண் ஐந்து அவசியம் '' என்று எழுதியிருந்தது. ஐந்தாவது கேள்வி கட்டாயம்னு சொல்லியிருக்காங்க. அதை விட்டுட்டு வந்துட்டியே!'' அப்பா கத்தினார்.
அப்படின்னா நூற்றுக்கு நூறு வராதா?'' அம்மா கவலையோடு கேட்டார்கள்.
அப்பாதான் பதில் சொன்னார். ""எப்படி வரும்? கட்டாயம்னு கேட்டிருக்கிற கேள்விக்கு விடை எழுதலியே! அறுபதுக்கு நாற்பதுதான் கொடுப்பாங்க...''
ஏண்டா  அப்துல்லாஹ் இப்படிச் செய்தே?'' அம்மாவின் கேள்வியில் வருத்தம்.
எல்லாம் உனக்கு அவசரம்தான். எந்த வேலையைச் செய்தாலும் நிதானமாக, முழு கவனத்தோட, முழு ஈடுபாட்டோட செய்யணும். எதையும் அரைகுறையாகச் செய்யக்கூடாதுன்னு ஆயிரம் முறை சொல்லியிருக்கிறேன். நீ கேட்டால்தானே!'' என்று அப்பா கோபமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
போன வாரம்தான் அப்துல்லாஹ்,  ஒரு பிரபல பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பம் கேட்டுக் கடிதம் எழுதியிருந்தான்.
கையெழுத்துப் போட்டாயா? உறையின் மேல் முகவரி சரியாக எழுதினாயா? மறக்காமல் பின்கோடு எழுது. பின்கோடு குறிப்பிடாவிட்டால் கடிதம் போய்ச் சேரத் தாமதமாகும்...'' என்றெல்லாம் அப்பா எச்சரித்துவிட்டுப் போயிருந்தார். எல்லாவற்றிற்கும் "" உம்... உம்...'' என்று தலையாட்டினான் அப்துல்லாஹ். கடித உறையைத் தபாலில் சேர்த்துவிட்டு வந்த பிறகுதான், தபால்தலை ஒட்டாதது நினைவுக்கு வந்தது. நான்கைந்து நாட்களில் கடிதம் அவனுக்கே திரும்பி வந்து விட்டது. அபராதம் கட்டி வாங்கிக்கொண்டான்.
அப்பா அப்போதும், ""அரைகுறை வேலை ஆபத்தில் முடியும்! எதையும் பொறுப்புடன்செய்'' என்றார்.
அப்துல்லாஹ்வின் தங்கை ஆயிஷா இன்னும் மோசம். ஒரு வேலையைச் செய்தால் அதைப் பாதியிலேயே விட்டுவிட்டு வந்துவிடுவாள். வாசல் குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டு வரச் சொன்னார்கள் அம்மா.  ஆய்ஷா, வாளியை எடுத்துக்கொண்டு போனாள்.
தொலைக்காட்சியில் ஏதோ பாட்டுச் சத்தம் கேட்கிறதென்று, குழாயடியில் வாளியை வைத்துவிட்டு வந்துவிட்டாள். சற்று நேரம் கழித்து,""தண்ணீர் பிடித்து வரச் சொல்லியிருந்தேனே, எங்கே?'' என்று அம்மா கேட்டதும்தான் நினைவு வந்தது. வாசலில் போய்ப் பார்த்தால், வாளியைக் காணோம்.
திங்கட்கிழமை வெள்ளைச் சீருடை வேண்டும் என்று, ஸ்கர்ட்டுக்கும் சட்டைக்கும் ஆய்ஷா சோப்புப் போட்டுத் தேய்த்தாள். ஆனால் உலர்த்த மறந்துவிட்டாள். ஏதோ வேலை. பாதியிலேயே வைத்துவிட்டுப் போய்விட்டாள். மறு நாள் பள்ளிக் கூடம் கிளம்பும்போது வெள்ளைச் சீருடையைத் தேடியபோதுதான், அதை உலர்த்த மறந்தது நினைவுக்கு வந்தது. உடனடியாக குளியலறைக்குச் சென்று வாளியில் துணி இருக்கிறதா என்று பார்த்தாள். நல்ல வேளை. அம்மா எடுத்து உலர்த்தி வைத்திருந்தார்கள்.
ஒரு நாள் இரவு. பால் சுட வைப்பதற்காக அம்மா எழுந்து சமையலறைப் பக்கம் போனார்கள். கூடவே எழுந்து வந்த அப்பா சட்டென்று சொன்னார்,""நில். அடுப்பைப் பற்ற வைக்காதே! விளக்கைப்போடாதே! கேஸ் நாற்றம் அடிக்கிறது.'' அம்மாவும் மூக்கைக் சுளித்து,""ஆமாம், சமையல் கேஸ் கசிகிறது!'' pt என்றார்கள்.
பிறகு அப்பா, ஒரு துணியால் மூக்கைக் கட்டிக்கொண்டு சமையல் அறையின் கேஸ் சிலிண்டரைச் சரியாக மூடினார். சன்னல் கதவுகளைத் திறந்து வைத்தார். சிறிது நேரம் சென்றது. ஆபத்து எதுவும் நேராது என்று உறுதி செய்துகொண்ட பிறகு, அடுப்பைப் பற்ற வைத்தார்கள் அம்மா. அப்பா கேட்டார்,""கேஸ் சிலிண்டரைச் சரியாக மூடவில்லை. கேஸ் கசிந்து அறை முழுதும் பரவியிருக்கிறது.
இது யார் செய்த வேலை?''  அம்மா சொன்னார்கள்,""ஆய்ஷாதான் எதற்காகவோ தண்ணீரைக் கொதிக்க வைத்தாள். அரைகுறை வேலை. சிலிண்டரைச் சரியாக மூடவில்லை போலிருக்கிறது.''
நீ கவனிக்காமல் போய் கேஸ் அடுப்பைப் பற்ற வைத்திருந்தால் பெரிய விபத்தே நிகழ்ந்திருக்கும்...''
வீடு தீப்பிடித்திருக்கும். நானும் கருகிப் போயிருப்பேன்...''
மறுநாள் காலை செய்தி அறிந்ததும் ஆய்ஷா விக்கித்துப்போனாள்.""என்னை மன்னித்துவிடுங்கள் அம்மா...'' என்று அம்மாவைக் கட்டிக்கொண்டாள்.""அம்மா, இது எனக்கொரு பாடம். இனி எப்போதும் கவனக் குறைவாக இருக்கமாட்டேன். எதையும் அரைகுறையாகச் செய்யமாட்டேன்!''
சிறு கவனக் குறைவு எப்படிப்பட்ட பேராபத்தை விளைவிக்கக்கூடியது என்று நானும் தெரிந்துகொண்டேன்!'' என்றான் அப்துல்லாவும்.

Read more...

அறிவியல் இங்கு செல்லுபடியாவதில்லை.

17 July 2011


கடற்கரை பிடிக்காதவர்கள் உண்டா. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீண்டு கொண்டே செல்லும் கடல், இடைவெளிவிடாமல் கரை மீது வந்து மோதிக் கொண்டிருக்கும் அலைகள், மணல்வீடு கட்டி விளையாட குருணை குருணையாக நைசான மணல் ஆகியவற்றைக் கொண்ட கடற்கரையை யாருக்குத்தான் பிடிக்காது
உலகின் மொத்த பரப்பளவில் 71 சதவீதம் கடல். நிலத்தில் உள்ள உப்பு அனைத்தும் ஆறுகளில் அடித்துச் செல்லப்பட்டு காலங்காலமாக கடலில் கலந்து வருவதால், கடல்நீரில் உப்பு கூடி அது உவர்நீராகிவிட்டது. உலகிலேயே சாக்கடல் (டெட் சீ) என்ற கடலில்தான் இந்த உப்புத்தன்மை அதிகம். இதனால் நீர் அடர்த்தி அதிரித்து இருப்பதால், அந்தக் கடலில் இறங்கினால் நாம் மிதக்க முடியும்.

கஹ்ஃப் அத்தியாத்தில் கூறப்படும் சாசனச் சுருள் பற்றி நமது தமிழாக்கத்தில் 271 வது விளக்கத்தில் விளக்கப்பட்டுள்ளது. அது குறித்து பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட டாகுமென்டரி 

Playl - Download    வீடியோ_1
Playl - Download    வீடியோ_2
Playl - Download     வீடியோ_3
Playl - Download     வீடியோ_4

அதேநேரம், நம்ம ஊரில் கடற்கரைக்கு மிக அருகிலேயே கிணறு தோண்டினால் நல்ல தண்ணீர் கிடைக்கிறதே, இது எப்படி? அந்த தண்ணீர் கடல்நீரைப் போல் ஏன் உப்புக் கரிப்பதில்லை?
மழை நீரில் இயற்கையாகவே காய்ச்சி வடித்தல் செயல்பாடு நடைபெறுகிறது. முதலில் நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் ஆவியாகி, மேகமாகி காற்றில் இடம்பெயர்கிறது. இப்படி உருவாகும் மேகங்கள் ஓரிடத்தில் அதிகமாகச் சேர்வதால் நீராவி குளிர்ந்து திரவமாகி, மழையாகப் பொழிகிறது. இயற்கையாக உருவானாலும் மழை நீரில் கனிமங்கள் குறைவாகவே இருக்கும். ஆனால், கடலுக்கு அருகே பொழியும் மழையில் கனிமங்கள் அதிகம்.
அதிக கனிமத்துகள்களை கடல் காற்றில் தூவுவதே இதற்குக் காரணம். அவற்றுடன் தண்ணீர் மூலக்கூறுகள் வினைபுரிந்து மழை நீரில் கனிமங்கள் கலக்கின்றன. மழை நீரில் நம் உடலுக்குத் தேவையான அளவு கனிமங்கள் இல்லாவிட்டாலும், அது கடற்கரை மணலைத் துளைத்துச் சென்று நிலத்தடி நீருடன் கலந்துவிடுவதால், அது நாம் குடிப்பதற்கு ஏற்ற ஒன்றுதான்.
கடற்கரையின் அடிப்பகுதி நிலத்தைத் தோண்டினால், அது மணலாலும் உப்புப்படிவுகளாலும் நிறைந்திருக்கும்.
இந்தத் தன்மை காரணமாக அதிக நுண்துளைகள், எளிதில் ஊடுருவும் தன்மை அதற்கு உண்டு. இப்படி பொலபொலவென்று அதிக இறுக்கமின்றி இருப்பதால்தான், தோண்டியவுடன் தண்ணீர் கிடைக்கிறது. மழை பெய்யும்போது, தூய்மையான மழை நீர் இந்த நுண்துளைகளுக்குள் எளிதில் ஊடுருவி, மணலால் வடிகட்டப்பட்டு நிலத்தடி நீரோடு சென்று கலந்துவிடுகிறது.
உப்புக்கரிக்கும் நீரைக் கொண்டுள்ள கடற்கரைக்கு மிக அருகிலேயே கரையில் நல்ல தண்ணீர் கிடைப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம், நல்ல தண்ணீரின் அடர்த்தி செ.மீக்கு 1000 கிராம் உள்ளது. ஆனால், கடல் உவர்ப்பு நீரின் அடர்த்தி செ.மீக்கு 1.0255 கிராம். இதனால், கடலுக்கு அருகேயுள்ள நிலத்தடி நீர்மட்டத்தில் உவர்நீர் இருந்தாலும், நல்ல தண்ணீர் அதற்கு மேல் மிதக்கவே செய்யும். அடர்த்தி குறைவாக இருப்பதுதானே மேலே இருக்கும். கடற்கரையில் ஊற்று தோண்டி தண்ணீர் விற்பனை செய்பவர்கள் இந்த அறிவியலை நம்பியே தொழில் செய்கிறார்கள்.
ஆனால், சென்னையின் கடற்கரையோர பகுதிகளான திருவல்லிக்கேணி, திருவான்மியூர் பகுதிகளில் நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்பட்டு விட்டதால், அதை ஈடுகட்ட கடல்நீர் உள்ளே புகுந்துவிட்டது. இதனால், இப்பகுதிகளில் இந்த அறிவியல் செல்லுபடியாவதில்லை.

Read more...

சின்னத்திரைக்கும் தணிக்கை வேண்டும்

11 July 2011


ஒரு காலத்தில் திரைப்படங்கள் மீது மக்களுக்கு எவ்வளவு ஆர்வம் இருந்ததோ அதை விட அதிகமான ஈர்ப்பு இப்போது தொலைக்காட்சி தொடர்கள் மீது உள்ளது.

தனியார் தொலைக்காட்சிகளில் காலையில் தொடங்கி இரவு 11 மணி வரைக்கும் இடைவிடாது தொடர்கள் ஒளிபரப்பப்படுகின்றன. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு பெண்களும் இந்தத் தொடர்களில் மெய் மறந்து மூழ்கிவிடுகின்றனர்.

பெரும்பாலான தொடர்களில் ஒரு பெண், மற்றொரு பெண்ணால் (மாமியார், மருமகள், நாத்தனார் உறவுக்குள்) கொடுமைப்படுத்தப்படுவது, தவறான உறவுமுறை ஆகிய கலாசார சீரழிவு மிக்க காட்சிகள் அதிகரித்து வருகின்றன.

பெண் ரசிகர்களை அதிகம் கொண்டுள்ள சின்னத்திரையில் இது போன்ற காட்சிகளைத் தவிர்க்கலாம். சில நேரங்களில் குடும்பத்துடன் பார்க்க முடியாத காட்சிகளும் ஒளிபரப்பாகின்றன. இது போன்ற காட்சிகளை அரைமணி நேரம் ஒளிபரப்புவதன் மூலம் எபிசோட்டின் எண்ணிக்கையைக் கூட்டுவது அவசியம்தானா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது.

ஒன்றுக்கும் பயனளிக்காத, நேரத்தையும், மின்சாரத்தையும் விரயமாக்கும் இத்தகைய தொடர்களில் பெண்கள் மூழ்கிப் போவதன் காரணம் என்ன?
 
 பயணம் குறித்த சேனல்கள், இயற்கையை விவரிக்கும் சேனல்கள், செய்தி சேனல்கள் உள்ளிட்ட பயனுள்ள சேனல்களைப் பார்ப்பது மிகவும் குறைவு. தன்னால் முடியாத காரியத்தை தொடர் கதாநாயகி திரையில் தோன்றி செய்வதை பெண் ரசிக்கிறாள். அது நல்ல விஷயமாக இருந்தாலும் சரி, மாமியாரை கொடுமைப்படுத்தும் விஷயமாக இருந்தாலும் சரி. அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவியாக தொடர்கள் உள்ளன. சில நேரங்களில் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கக் முடியாத சூழ்நிலைகளும் எழுகின்றன. இதைப் பார்க்கும்போது, சின்னத்திரைக்கும் தணிக்கை அவசியமானது என்றே தோன்றுகிறது.

பெரும்பாலும் நடைமுறையில் உள்ளதைவிட மிகைப் படுத்திதான் தொடர்களில் சித்தரிக்கிறார்கள். பல இடங்களில் அது மிகைப்படுத்தப்படுகிறது. பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், வீட்டில் நிகழும் சண்டை சச்சரவுகள் உள்ளிட்டப் பிரச்னைகளைக் காண்பிக்கும் வேளையில், அதற்கான தீர்வையும் அவர்கள் காண்பிப்பதில்லை. சில நேரங்களில் அது அன்றாட வாழ்க்கைக்கும் பயன்படாமல் பாதகமான முடிவைத் தருகிறது. தினம் ஒரு "சஸ்பென்ஸ்' வைத்து தொடர்களை முடிப்பதால், அதனைத் தொடர்ந்து பார்க்க பெண்களைத் தூண்டுகிறது. இதனால் அன்றாடப் பணிகள் கூட மறந்து போய்விடுகின்றன.


குடும்பக் கதைகளை ஒளிபரப்புவதால், பெண்கள் அந்தத் தொடரின் நாயகியாக தன்னை பாவித்துக் கொள்கிறார்கள். இதனால் தன் வீட்டில் நிகழும் நிகழ்வு போலத் தொடரையும் நேசிக்கத் தொடங்குகிறாள். அது ஒருபுறமிருக்க, பெண்கள் எவ்வாறு தனித்துச் செயல்பட முடியும், போராடி வெற்றி காண்பது, ஆண் துணையில்லாமலே வாழ்க்கையில் வெற்றி போன்ற தன்னம்பிக்கை ஊட்டும் செயல்களும் தொடர்களில் காண்பிக்கப்படுகின்றன. அந்த நல்ல காரியங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்காக பல மணி நேரங்கள் அதில் மூழ்கிவிடுவது ஆபத்தானது.



Read more...

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP