கல்விக்கும், குடும்ப கலங்கத்துக்கும் வழிவகுக்கும் சினிமா, "டிவி

30 September 2010

பெற்றோர்களின் எதிர்ப்பு பயந்து காதல் ஜோடிகள் போலீஸ் ஸ்டேஷன்களில் தஞ்சம் புகுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. நாகரீகத்தில் வளர்ச்சி காணும் போதெல்லாம் ஆனந்தம் கண்ட நாம், அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் சில நேரங்களில் வருந்த வேண்டியுள்ளது. போதாக்குறைக்கு சினிமா, "டிவி' போன்றவை இளம் பெண்கள், இளைஞர்களை சீரழித்து வருகின்றன. படிக்கும் வயதில் காதல் என்ற பெயரில் கல்வியை கோட்டை விடும் சிறிசுகளின் செயல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பாலும் வெளிநாடுகளில் வேலைபார்ப்போர் அதிகம் உள்ளனர். அம்மாவின் அரவணைப்பு கிடைக்கும் அளவுக்கு அப்பாவின் கண்டிப்பு கிடைப்பதில்லை. இதனாலேயே மாணவிகள் சிலர் தவறான பாதைக்கு செல்கின்றனர். இன்னும் சில இடங்களில் பெற்றோரின் பொறுப்பின்மை குழந்தைகளை சீரழிவுக்கு அழைத்து செல்கிறது.

"டிவி'யில் ஒளிபரப்பாகும் தொடர்களை தங்கள் மகளுடன் உட்கார்ந்து பார்க்கும் தாய்மார்களுக்கு, அதனால் ஏற்படும் விபரீதம் புரிவதில்லை. இன்று சினிமாவை மிஞ்சும் அளவுக்கு காமமும், குரோதமும் தொடர்களில் தான் ஒளிபரப்பாகிறது. இதனால் மாணவிகளின் மனம் திசை மாறி ,காதல் வலையில் சிக்கிவிடுகின்றனர். அதன் பின் பெற்றோரை உதாசினப்படுத்தி வீட்டை விட்டு வெளியேறும் காட்சிகளும் சினிமா மற்றும் "டிவி' களில் கண்முன்னே காட்டிவிடுகின்றனர். இதற்காக சட்டரீதியாக செய்ய வேண்டியவற்றையும் எடுத்துரைக்கின்றனர். இதையை தங்களின் காதலுக்கு போதனையாக எடுத்துக்கொண்டு மாணவிகள் பலரும் காதலனுடன் படி தாண்டுகின்றனர். எல்லாம் அறிந்த பெற்றோரும் வேறு வழியின்றி தனது பெண்ணை கடத்தி சென்றதாக போலீசில் புகார் செய்கின்றனர். பெண்ணே, தன்னை விரும்பியவரை திருமணம் செய்து கொண்டு கோர்ட் அல்லது போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்து விடுகிறார். அதன் பின் பெற்றோர் தலையில் அடித்துக்கொண்டு அழுதுபுலம்புகின்றனர்.



இது தமிழகத்தில் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் பிரச்னை ஏற்பட்ட பிறகே, அதை தடுக்க பெற்றோர் முன்வருகின்றனர். அதே அக்கறையை தங்கள் குழந்தைகளின் கண்காணிப்பிலும், வளர்ப்பிலும் காட்டினால் இது போன்ற கசப்பான சம்பவங்களை தடுக்கலாமே. கல்விக்கும், குடும்ப கலங்கத்துக்கும் வழிவகுக்கும் சினிமா, "டிவி'போன்றவற்றிக்கு முற்றுப்புள்ளி வைப்பதால் இது போன்ற கசப்பான அனுபவங்களையும் தவிர்க்கலாம்.


0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP