தீமைகள் களைந்திட தீவிரம் காட்டுவோம்

13 August 2009

ஒரு மனிதன் சந்திக்கும் தீய நிகழ்வுகளுக்கோ அல்லது நல்ல நிகழ்கவுகளுக்கோ (பெரும்பாலும் ) அவனே காரணமாகிறானே தவிற மற்றவர்கள் அல்ல .

தீமையென்றாலும் தீதென்றாலும் அவை பாவம் என்ற ஒரே பொருள் தரக்கூடிய சொற்களாகத்தான் பார்க்கப் படுகின்றன. தீமைகள் செய்யாதிருப்பதும் கூட நன்மைதான். ஆனால் நன்மைகள் செய்யாதிருக்கும் ஒருவரை தீயவரென்று அவ்வளவு எளிதில் கூறிவிட முடியாது.

மனிதர்கள் செய்கின்ற பாவங்களை அல்லது தீமைகளைப் பொறுத்தவரை பின் வரும் மூன்று தலைப்புகளாக அவற்றை வகைப்படுத்தலாம் என்கிறார்கள் சமூக ஆர்வளர்கள். அவைகளில் முதல் இரண்டு எவைகளெனில் மனிதன் இறைவனுக்குச் செய்யும் தீமைகள் மற்றும் மனிதன் (மற்ற) மனிதனுக்குச் செய்யும் தீமைகள் என்பனவாகும். இது வல்லாமல் மூன்றாவதாக நாம் கூறவருவது மனிதன் மற்ற உயிரினங்களுக்கோ அல்லது தாவரங்களுக்கோ செய்யும் தீமைகளாகும். இந்தத் தீதும்கூட பாவம்தான் என்றாலும் இந்த மூன்றாவது வகைச் செயல்கள் மனிதர்களிடையே அவ்வளவாக பேசப்படுவதில்லை. ஒரு வேளை மனிதத் தீமைகளினால் பாதிக்கப்படும் விலங்குகள் மற்ற உயிரினங்கள் தங்களுக்குள் இதைப்பற்றி பேசிக் கொள்கின்றனவா எனபதும் படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த ( மனிதர்களுக்கு தெரியாத ) ஒன்றுதான்.


Image Ref: 12-54-3 - English Country Garden, Viewed 11182 times Image Ref: 12-54-73 - English Country Garden, Viewed 5638 times Image Ref: 12-54-53 - English Country Garden, Viewed 13695 times Image Ref: 12-04-9 - Plant Pots, Viewed 7682 times Image Ref: 12-04-6 - English Country Garden, Viewed 7803 times


Heading Home - Aryshire cattle Heading Home - Aryshire cattle




தாவரங்கள் உள்ளிட்டவைகளுக்கு கூட உயிர் இருக்கிறது என்று கூறப்படும் இந்த விஞ்ஞான யுகத்தில் ஒன்றை நினைவில் கொள்வது பொருத்தம் என எண்ணுகிறோம். உண்ண அனுமதிக்கப்பட்ட உயிரினங்களையோ அல்லது தாவர வகைகளையோ சமைத்து உன்பது இங்கே பாவமாக கருதப்பட மாட்டாது. அதே நேரத்தில், தான் பராமரிக்கும் ஒரு தாவரச் செடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் ஊற்றாமலோ அல்லது தனது வளர்ப்பு பிராணிகளுக்கு வேளாவேளைக்கு உணவு தராமலோ இருந்தால் அது தீதில்லாமல் வேரில்லைதானே ?. இதைத்தான் கொண்றால் பாவம் தின்றால் தீரும் என்கிற பழமொழியும் உணர்த்துகிறது. பிற உயிரினங்களுக்கோ அல்லது தாவரங்களுக்கோ செய்யப்படும் துன்புறுத்தல்களில் எவையெல்லாம் பாவங்கள் என்பதை அளவிடுவதில் ஒவ்வொறு சமூகத்தவருக்கும் வெவ்வேறு கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.

எனவேதான் இந்த மூன்றாவது வகை செயல்களை நா(மு)ம் அவ்வளவாக இத்தொடரில் கண்டு கொள்ளப்போவதில்லை.

நாம் இங்கே விவாதிக்கவிருக்கும் பாவங்கள் அல்லது தீமைகள் இரண்டாவது வகையைச் சார்ந்ததாகும். ஆம்! மனிதன் மனிதனுக்கே செய்யும் தீதைத்தான் இத்தொடரில் அலசவிருக்கிறோம்.

இந்த இரண்டாவது வகை தீமையையும் இரண்டு வகைப்படுத்தலாம் என்கின்றனர் அறிஞர் பெருமக்கள். அதாவது மனிதன் தனக்குத்தானே செய்துகொள்ளும் தீமை முதல் வகை. என்றும் தனது இனத்திற்கோ அல்லது சமுதாயத்திற்கோ செய்யும் தீது இரண்டாம் வகை என்றும் கூறுகிறனர் அவர்கள்.

என்னது ? ஒரு மனிதன் தனக்குத்தானே தீமை செய்து கொள்வானா ? புறியவில்லையே" என எண்ணுபவர்கள் அடுத்த அத்தியாயம்வரை காத்திருங்கத்தான் வேண்டும்.
மர்யம் செல்வன் M.A
தீமைகள் அகலும் ..... இன்ஷா அல்லாஹ்
**********************************************
ஒடுக்கப் பட்டோரின் உரிமைக்குரல்உணர்வு வாரஇதழ்
ஒரிறைக் கொள்கை விளக்க மாத இதழ் ஏகத்துவம்.
மகளீர் மாத இதழ் தீன்குலப் பெண்மனி


0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP