மனித உடல் மதிப்பு மிக்கதே!

19 August 2009


மனித உடலுக்கு மதிப்பு இருக்கிறதா ?

இந்தக் கேள்விக்கு "இருக்கிறது " என்றும் உயிர் போனபின் உடலுக்கு ஏது மதிப்பு என்றும் இருவகையான ப்தில்களை நாம் பெற இயலும். இறந்தபின் அனைத்து உடல்களும் அடக்கப்பட வேண்டியதுதான்.

என்வே அதற்கு மதிப்பில்லை என்ற சிலரின் வாதம் ஒரு புறமிருக்க, இறந்த சில நிமிடங்களுக்குள் இறந்தவரின் சில உறுப்புகளை எடுத்து அதை மற்றவருக்கு பொருத்துவதன் மூலம் அது கதிப்படைகிறது என்ற வாதத்தையும் ஒதுக்க இயலாது. குறிப்பாக கண்களை இவ்வாறு தரலாம் என்பது அறிந்த ஒன்றே!

நவீன மருத்துவமானது மூளை மற்றும் இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளைக்கூட தேவைக்கு ஏற்ப இறந்தவரின் உடலில் இருந்து எடுத்து பயன்படுத்திட முயன்று வருகிறது.மேலும் ஒருவன் இறப்பதற்கு முன்பேகூட சிறுநீரகங்களில் ஒன்றை தேவைப்படும் மற்றவருக்கு தந்து மதிப்பு மிக்கதாக ஆக்கலாம்.

நமது உடலில் சுரக்கும் இரத்தம்கூட இரத்ததானம் செய்யப்படுவதன் மூலம் பல்வேறு சமயங்களில் மற்றவர்களின் உயிர் காக்க உதவுகிறதுதானே. இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொறு மனிதனின் உடலில் உள்ள சில உலோக , அலோகபொருள்களுக்கு (அதாவது இரசாயானப் பொருள்கள் ) விளைகள் நிர்ணயித்து பட்டியலிட்டாலும் மதிப்புதான் பெருகிறதே தவிற வேறில்லை.

ஆகவே மனித உடல் ( இறப்புக்கு முன்பும் பின்பும் ) அவனுக்கும் பயன் தந்து தேவைக்கேற்ப மற்றவருக்கும் உதவுவதால் அது மதிப்பு மிக்கது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இத்தகைய மதிப்பு மிக்க உடலை தந்து இறுதிகாலம்வரை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நியதியை மட்டும் மனிதர்களில் சிலர் மதிப்பதே இல்லை என்பதுதான் நிதர்சனமாகும்!

தகுந்த உடல் உழைப்பு, தேவைக்கேற்ப ஒய்வு மற்றும் உறக்கம், சரியான நேரத்தில் அளவான உணவு ஆகிய எதையும் முறையாகச் செய்யாமல் பரபரப்பாக இயங்கிக் கொள்ளும் இன்றைய மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ தமது ஆரோக்கியத்தோடு விளையாடுபவர்களாகிறார்கள்.

வேறு சிலரோ கண்ட, கண்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி தெரிந்தே தனது மதிப்பு மிக்க உடலை சிதைத்து வருகின்றனர். இவ்வாறு தனது உடல் நலன்பற்றி எண்ணாமல் ஆரோக்கித்திற்கு எதிராக செயல்படும் ஒவ்வொரு மனிதனும் தனக்குத்தானே தீங்கு செய்பவனாகிறான்.

தங்களது உடல்நலம் பற்றி கவலைப்படாமல் இருக்கும் சிலரால் மற்றவர்களுக்கு ஏதும் தீதில்லைதான். ஆனால் புகைபிடிப்பது முதல் மது குடிப்பது வரையிலான சில தனி மனிதத் தீமைகள் அவனுடைய ஆரோக்கியத்தை பாதிப்பதோடு மட்டும் நின்று விடுவதில்லை.

அவைகளினால் அதாவது தனக்குத்தானே செய்து கொள்ளும் இத்தகைய தீமைகளினால் மற்றவர்களும் பாதிக்கப் படும்போது அது சமூக பிரச்சனையாகி விடுகிறது. புகைப் பிடிப்பவர்கள் விடும் நச்சுக்காற்று இந்தப் புவியில் பரவி அருகில் இருப்பவர்களையும் பாதிக்கிறது.

அதேபோல் குடித்துவிட்டு கும்மாளம் போடும் ஒருவனால் குடும்பத்தினர் பாதிக்கப் படுவதும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். ஆக தனது மதிப்பு மிக்க உடலுக்கு ஒருவனால் வைக்கப்படும் உலை மற்றவர்களின் ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் கெடுப்பதாக அமைந்து விடுகிறது.

இத்தகைய தனிமனித செயல்கள் தீதுதான் என்றாலும் நாம் விவரிக்கவிருப்பது
வேறுவகையான தீமைப் பற்றியே. மனிதன் தனது இனத்திற்கோ அல்லது சமுதாயத்திற்கோ செய்துவரும் தீமைகளில் முக்கியமான அதைப்பற்றி அடுத்து நாம் அலசுவோம்.

தீமைகள் அகலும் ..... இன்ஷா அல்லாஹ்

*********************************
படித்துவிடீர்களா?

ஒடுக்கப் பட்டோரின் உரிமைக்குரல் உணர்வு வாரஇதழ்
ஒரிறைக் கொள்கை விளக்க மாத இதழ் ஏகத்துவம்.
மகளீர் மாத இதழ் தீன்குலப் பெண்மனி




Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP