மாணவிக்கு மொபைல் போனில் 'ரூட்' போட்ட வாலிபர்

03 October 2009

மொபைல் போன் நல்லதாக இருந்தாலும் அடிக்கடி புதியதாக மொபைல்களை மாற்றவில்லை என்றால் சிலருக்கு தூக்கமே வராது. சிலர் காசு கொடுத்து புதியதாக வங்கிவிடுவார்கள். ஆனால் பல பேர் பழைய மொபைலை கொடுத்துவிட்டு புதியதை வாங்குவார்கள். அப்படி அடிக்கடி மொபைலை மாற்றுபவர்கள் மிகவும் கவணமாக இருக்க வேண்டும் . இப்படித்தான் பல் மருத்துவம் படிக்கும் மாணவிக்கு மொபைல் போனில் "ரூட்' போட்ட, டீ கடை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சென்னை மந்தைவெளியை சேர்ந்த பிரபலமான பிரமுகரின் மகள். இவர், சென்னை அருகேயுள்ள கல்லூரியில் பல் மருத்துவம் படித்து வருகிறார். இவரது மொபைல் போன் எண்ணை, கல்லூரியில் படிக்கும் தோழியிடம் கொடுத்திருந்தார்.வேறு மொபைல் போன் வாங்க நினைத்த அவரது தோழி, மொபைல் போனை "செகண்ட்ஸ் சேல்ஸ்' கடையில் விற்றார். அந்த மொபைல் போனில் மாணவியின் மொபைல் எண் பதிவாகியிருந்தது.

அந்த மொபைல் போனை திருவள்ளூர் ஏகாட்டூரைச் சேர்ந்த, டீ கடையில் வேலை பார்க்கும் உலகநாதன் (25) வாங்கி பயன்படுத்தினார். போனில் பதிவாகியிருந்த மாணவியின் மொபைல் எண்ணுக்கு தொடர்புகொண்டு கல்லூரி மாணவர் போல் பேசினார்.இந்த விவரம், மாணவின் வீட்டிற்கு தெரியவந்தது. மொபைல் போனில் பேசி ரூட் போட்ட வாலிபரை பொறி வைத்து பிடிக்க, மாணவியின் பெற்றோர் முடிவு செய்தனர். டீ கடை வாலிபரிடம் இனிமையாக மாணவியை பேச வைத்தனர்.சென்னை காமராஜர் சாலையில் உள்ள கண்ணகி சிலை அருகே, "டிப் டாப்' உடையுடன் டீ கடை வாலிபர் உலநாதன் காத்திருந்தார்.
தங்கள் காரில் சென்ற மாணவியின் உறவினர்கள், வாலிபரை காரில் தூக்கிப் போட்டுக்கொண்டு பறந்தனர்.தனி இடத்திற்கு அழைத்துச் சென்று நன்றாக "கவனித்தனர்'. பிறகு அபிராமபுரம் போலீசில் உலகநாதனை ஒப்படைத்தனர். உதவி கமிஷனர் ஐசக்பால்ராஜ் உத்தரவின் படி, மொபைல் போனில் ஆபாசமாக பேசி ஈவ் டீசிங் செய்த பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
.

0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP