சிறிய விஷ​யங்​க​ளில்​தான் ஏரா​ள​மாக கற்​றுக் கொள்ள முடி​யும்

25 November 2010


பிரம்​மாண்​டங்​க​ளைப் பார்த்​துப் பார்த்து,​​ சிறிய விஷ​யங்​க​ளைக் கண்​டு​கொள்​வ​தில்லை; ஆனால்,​​ அந்​தச் சிறிய விஷ​யங்​க​ளில்​தான்  ஏரா​ள​மாக கற்​றுக் கொள்ள முடி​கி​றது.​ அமெ​ரிக்க எழுத்​தா​ளர் தோரோ நடப்​பது பற்றி மட்​டும் 100 பக்​கங்​க​ளைக் கொண்ட புத்​த​கம் ஒன்றை எழு​தி​யுள்​ளார்.​ பூமி​யு​டன் நேர​டி​யா​கத் தொடர்​புள்​ளவை கால்​கள் மட்​டுமே.​ பள்​ளிக் காலங்​க​ளில் விளை​யா​டு​வ​தைத் தவிர கால்​க​ளுக்கு இப்​போது வேறெந்த வேலை​யும் நாம் கொடுப்​ப​தில்லை.​ சோம்​பேறி ஆவ​தற்கு முதல் அறி​குறி கால்​க​ளுக்கு எந்த வேலை​யும் கொடுக்​கா​த​து​தான்.​ சைபீ​ரிய பற​வை​கூட இந்​தி​யா​வுக்கு பறந்து வரு​கி​றது.​ நாம் வசதிகள் இருந்தாலும் இங்​குள்ள தாஜ்​ம​கா​லைக்​கூட பார்க்​கச் செல்​வ​தில்லை.​ பய​ணம் செய்​வ​தி​லுள்ள அனு​ப​வம் வேறெ​தி​லும் கிடைக்​காது.​ கல்​விக் கூடங்​க​ளில் பயி​லும் கல்வி மனித வாழ்க்​கைக்கு நேர​டி​யாக பயன்​பட்​ட​தில்லை.​ வகுப்​பறை,​​ பாடங்​கள்,​​ தண்​ட​னைக்​குள்​ளேயே நாம் முடங்​கி​வி​டு​கி​றோம்.
ரஷிய எழுத்​தா​ளர் ஆன்​டன் ஷெக்​காவோ தனது வீட்​டின் முன் இருந்த காலி​யி​டத்​தில் ஆசி​ரி​யர்​க​ளுக்​காக ஒரு முகாமை அமைக்​கப்​போ தாகக் கூறி​னார்.​ ரஷிய ஆசி​ரி​யர்​கள் கம்​பீ​ரத்​து​டன் இருப்​ப​தில்லை; அவர்​க​ளைக் கண்​ட​றிய முடி​ய​வில்லை என அவர் குறிப்​பிட்​டார்.​ கல்வி என்​பது ஊதி​யம் பெறும் வேலை என்​ப​தோடு ஆசி​ரி​யர்​கள் நின்​று​வி​டு​கி​றார்​கள்.​ பணி​யாற்​றும் ஊரின் வர​லாறு,​​ அந்த மக்​க​ளின் பண்​பாடு போன்​ற​வற்​றைத் தெரிந்து கொள்ள ஆசி​ரி​யர்​கள் முனைப்பு காட்​டு​வ​தில்லை என்​ப​தெல்​லாம் ஷெக்​கா​வோ​வின் வருத்​தங்​கள்.​
 
நம் வகுப்​ப​றை​க​ளில்​தான் பேதங்​களே தொடங்​கு​கின்​றன.​ அடிமை முறையை ஒழித்து ஆயி​ரம் ஆண்​டு​க​ளா​கி​யும் தொலைக்​காட்​சி​கள் ஒரே நாளில் அடிமை முறையை நமக்​குக் கற்​றுக் கொடுத்து விடு​கின்​றன.​ வீடு​க​ளில் குழந்​தை​க​ளைப் பேசவே விடு​வ​தில்லை; தொலைக்​காட்​சி​கள்​தான் பேசிக் கொண்டே இருக்​கின்​றன.​ நாம் பிரம்​மாண்​டங்​களை நோக்​கியே பார்க்​கி​றோம்.​ அத​னால்,​​சிறிய சிறிய விஷ​யங்​களை கண்​டு​கொள்​வ​தில்லை.​ உண்​மை​யில் சிறிய விஷ​யங்​கள்​தான்,​​ நமக்கு நிறைய கற்​றுத் தரு​கின்​றன.​ தன்​னை​விட 5 மடங்கு அதிக எடை கொண்​ட​வற்றை எறும்பு சுமக்​கி​றது.​ நாம் எறும்​பைக் கண்​ட​வு​டன் நசுக்​கிக் கொள்​கி​றோம்.​ அதில் நாம் சுகம் கொள்​கி​றோம்.​

ஒரு கல்லை எடுத்​தால்,​​ அதை யார் மீதா​வது வீசிப் பார்க்​கத்​தான் நாம் முனை​கி​றோம்.​ அந்​தக் கல் பெரிய மலை​யின் ஒரு பகுதி என்​றுப் பார்ப்​ப​தில்லை.​ நம்முடைய சிறிய அலட்சியங்களால் கொஞ்​சம் கொஞ்​ச​மாக இந்த உலகை நர​க​மாக மாற்றி நமக்கு நாமே கேடு செய்து வரு​கி​றோம்.​ மனி​தர்​கள் தங்​க​ளி​ட​முள்ள சில சொற்​களை,​​ சிந்​த​னை​களை,​​ செய்​கை​களை மாற்​றிக் கொள்ள முன்​வர வேண்​டும் அபோதுதான் 
அது நமக்கும் மற்றவருக்கும் பயனுள்ளதாக அமையும். 

0 comments:

Post a Comment

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP