புதிய ஆரோக்கியமான தலைமுறை உருவாக்க முடியும்.

10 July 2011


உங்களைப் பார்க்கும் போது நீங்கள் திட்டும் காட்சிதான் அதன் நினைவிற்கு வரும். அதனால் நீங்கள் முதலில் குழந்தையின் கையில் அவ்வாறு உடையக்கூடிய பொருளை கொடுத்திருக்கவே கூடாது. அப்படி கொடுத்திருந்தாலும் அதை குழந்தை உடைக்காத வண்ணம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை என்று எண்ண வேண்டும். குழந்தையின் கைகளுக்கு எட்டாதவாறு அந்த பொருளை உயரமான இட்த்தில் வைக்க வேண்டும். அத்தனை பாதுகாப்பையும் தாண்டி அந்த பொருளைக் குழந்தை உடைத்து விட்டாலும்கூட அந்த குழந்தையிடம் கோபத்தைக் காட்டாமல், அதற்கு புரியவைக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு முறை கோபம் வரும் போதும், அந்த நேரத்தில் கோபப் படுவதால் உண்டாகும் பலன் என்ன என்று சிந்துத்து பார்க்க வேண்டும். தான் நினைப்பது எல்லாமே சரி என்பதுதான் எல்லோருக்கும் மிகவும் பிடித்த விஷயமாகிறது. அதைச் செய்வதற்குதான் அனைவரும் ஆசை படுகின்றனர். யாருக்கும் தெரியாமல் அதை செய்த பின் தங்கள் செய்த தவறை மறைக்க அதை நியாய படுத்தி பேசுகின்றனர். அல்லது பிரமாதமாக ஒன்றும் தெரியாத்து போல் நடிக்க ஆரம்பிக்கின்றனர். இதனால் உண்மையாக நடந்து கொள்பவர்களை அடயாலம் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒரு செயலை எப்படி செய்தால் அதில் வெற்றி பெற முடியும் என்று தெரியவேண்டும். செய்ய முடிந்தால்தான் அதை பற்றி சிந்திக்க வேண்டும். முடியவில்லை என்றால் அதற்கு முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு தொடந்து முயற்சி செய்யும் போது அதற்கு ஒரு முடிவு நிலை ஏற்படும். அதைத்தான் அறிவு என்று சொல்கிறார்கள்.
எந்த ஒரு செயலையுமே பொதுநோக்குப் பார்வையில் இருந்து சிந்தித்து பார்த்து ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும். நமக்கு நம் செயல்களே நன்றாகத் தெரிவதால் அதையே மீண்டும் மீண்டும் செய்யாமல் புதிய கோணத்தில் சிந்தித்து செயலபட வேண்டும். அப்போதுதான் நம் மனம் சீக்கிரமாக ஒரு முகப்படும். அதனால், புதிய ஆரோக்கியமான தலைமுறை உருவாக்க முடியும். அப்படி நடக்க முடியவில்லை என்றால், நம் மனம் எப்போதும் போல், கடந்த கால தவறுகளை பற்றியே சிந்தனை செய்து துக்கப் பட்டுக் கொண்டே இருக்கும். ஆசை, கோபம், களவு, காமம் போன்ற எல்லா துன்பம் தரும் செயல்களிலும் இதே போன்ற வழிமுறைகளைக் கையாளும் போது, கல்வி, செல்வம், வீரம், தொழில் என்று சகல வசதிகளும் கிடைக்கப் பெற்று வாழ்க்கை பிரகாசமாகி விடும்.

0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP