மூன்று ஓநாய்களும், ஒரு வெள்ளாடும்

12 September 2011



உலக மக்கள் தொகையில் நம் நாடு, இரண்டாவது இடத்தில் இருக்கிறதாம்; நமக்கெல்லாம் பெருமையான விஷயம் தான். அதேபோல, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியாவாம்; கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

100 கோடிக்கும் மேலான மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில், 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வாக்குரிமை அளித்து மக்களாட்சியை நடத்துகிறோம் என்பது, ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை தான். ஜனநாயகத்தில் மக்கள் தங்களுடைய தலைவிதியை தாங்களே தீர்மானித்து கொள்ளும் வழிமுறை தான் தேர்தல். அதன் ஆணிவேர் தேர்தல் முறை. இந்த தேர்தல் முறை அரசியல்வாதிகளாலும், அரசியல் கட்சிகளாலும், மக்களாலும் எவ்வளவு கேவலப்படுகிறது என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்து, தனக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொள்வது என்பதே இன்றைய அரசியல்வாதிகளின் நோக்கம்.

மதிய உணவுக்கு மட்டன் பிரியாணி செய்ய மூன்று ஓநாய்களும், ஒரு வெள்ளாடும் ஒன்றாக உட்கார்ந்து முடிவு செய்வதற்கு பெயர் தான் தேர்தல் முறையால் ஏற்படுத்தப்படும் ஜனநாயகம். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, அரசாங்க அதிகாரிகள் ஆகிய மூன்று ஓநாய்களுடன் உட்கார்ந்து முடிவு செய்யும் வெள்ளாடு, வாக்காள பெருமக்கள். தேர்தல் கமிஷனில் பதிவு செய்த கட்சிகளின் எண்ணிக்கை, தற்போது 1,200ஐ தாண்டி விட்டதாக தலைமை தேர்தல் கமிஷனர் கூறியுள்ளார். இவற்றில் 70 முதல் 80 சதவீத கட்சிகள், கடந்த பல ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை; தாங்கள் வைத்திருக்கும் கறுப்பு பணத்திற்கு, வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு பெறுவதற்கு மட்டுமே, கட்சியை தொடங்கி நடத்தி வருகின்றன. வாக்காளர்களை சேர்ப்பதிலிருந்தே தில்லுமுல்லு ஆரம்பம். பித்தலாட்டம்மும் தொடங்குகிறது.


0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

Blog Archive

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP