வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க

18 September 2011


நம்முடைய ரகசியங்கள் ஒவ்வொன்றும் இனிமையான அனுபவம்;  ஒரு மனிதனின் அடிப்படை மனக்கிளர்ச்சி என்பது உண்மையான கலை மற்றும் உண்மையான அறிவியலின் பிறப்பிடமாகும் என ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியுள்ளார்.
நாம் நலமாக இருக்கிறோம் என்பதை உணர்த்தும் நிலையை மகிழ்ச்சி என்போம். மனதளவிலும், உடலளவிலும், சமூகம் சார்ந்த நிலைகளிலும் சமநிலையில் இருக்க மகிழ்ச்சி என்பது உதவியாக இருக்கும். ஆசைகளும், பயமும் நம்முடைய எண்ணத்தை கிளர்ச்சியடையச் செய்கின்றன. மேலும் நமக்குள் இருக்கும் மகிழ்ச்சியான எண்ணங்களை மங்கலாக்குகின்றன. நம்முடைய ஆசைகள் நிறைவேறும் போதோ, நம்முடைய பயம் விலகும் போதோ நம்முடைய மனக்கிளர்ச்சி தற்காலிகமாக விலகிவிடும்.

அந்த நிலைதான் உள்ளார்ந்த மகிழ்ச்சி பிறக்கிறது. நாம் அறிய வேண்டிய உண்மை, "நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு முன்நிபந்தனை எதும் தேவையில்லை மற்றும் இந்த நொடியை தவிர மகிழ்ச்சியாக இருக்க நேரம் எதுவுமில்லை' என்பதாகும். உங்களின் மனதில் மகிழ்ச்சி இல்லையா? அதற்கான காரணத்தை உங்களிடம் நீங்களே கேளுங்கள். அதற்கு கிடைக்கும் பதில் சாதகமான ஒன்று என்றால் அதை நோக்கி உங்கள் பயணத்தை செலுத்துங்கள்.

உங்களுடைய தனிப்பட்ட இலக்கை நிர்ணயம் செய்யுங்கள்:
உங்கள் எண்ணத்தில் தோன்று தனிப்பட்ட இலக்கை நோக்கி உங்கள் பயணத்தை துவக்குங்கள். அதுவே உங்களுடைய வாழ்க்கைக்கும் அர்த்தத்தை கொடுக்கும். உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் ,  இழப்புகள் போன்றவற்றை பங்குவமாக எடுத்துக் கொள்ளுங்கள். உலகத்துடன் இணைந்து இருங்கள் தனிமையாக இருந்து வாடுவதை தவிர்த்து மற்றவர்களுடன் பழகுங்கள்.

உங்களுக்கு கஷ்டமான சூழ்நிலை ஏற்படும் போது இது மிகவும் உதவும். உலகுடன் ஒத்து வாழும் போது தான் உங்களைப் பற்றி நீங்கள் முழுமையாக அறிய முடியும். அவ்வாறு அறிந்தால் போகிற போக்கில் அனைத்து பிரச்னைகளையும் தீர்த்துவிடலாம். நட்பு வட்டாரத்தை பெருக்குங்கள். (பள்ளிவாசலுக்கு போன்ற )  எங்கு உங்களுக்கு அமைதி கிடைக்கிறதோ அங்கு உங்கள் குடும்பத்துடன் செல்லுங்கள் அல்லது நண்பர்களுடன் செல்லுங்கள். வழிபாட்டின் மூலம் ஏற்படும் அமைதி மனதில் உருவாகும் அழுத்தங்களை குறைக்கும்.  தர்கா போன்ற மூடநம்பிக்கைகளையும் அனாசாரங்களையும் வளர்த்து பாவத்தை சேர்க்கும் இடங்களுக்கு ஒருபோது செல்லாதீர்கள்.

நமக்கும் நண்பர்களுக்கும் இடையேயான நெருக்கத்தை அதிகப்படுத்தும். இது இக்கட்டான சூழ்நிலைகளில் உங்களுக்கு உதவியாக இருக்கும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழுங்கள் சத்தான உணவு, சுத்தமான காற்று, தினமும் உடற்பயிற்சி போன்றவை நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் நம்முடைய எண்ணங்களையும் புத்துணர்ச்சி பெற   செய்யும்.
 நேர்மையான எண்ணங்களை கொள்ளுங்கள் ஒரு செயலை செய்யத் துவங்கும் போது அதை நேர்மறையான எண்ணத்துடன் அணுகுங்கள். அவ்வாறு எடுத்துக் கொண்டால் நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் வரும் சங்கடங்களையும், இடைஞ்சல்களையும் சமாளிக்கும் மனப்பக்குவம் பெறலாம்.
உங்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும் காரணிகளை எண்ணி அதை சரியாக்கும் முயற்சிகளை அப்பொழுதே எடுக்க வேண்டும். மேற்கூறிய காரணிகளை கடைபிடித்தால் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

Blog Archive

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP