வளர்ச்சியின் நடுவே புதிய ஏழைகள் உருவாவது ஆரோக்கியமானதா

21 September 2011


   உடம்பில் ஏதோ கோளாறு என்று மனதுக்கு தோன்றுகிறது. டாக்டரிடம் போகிறோம். டெஸ்ட் எடுத்து பார்த்து விடுவோம் என்கிறார். ரிசல்ட் வந்ததும் உடனே சிகிச்சைக்காக அட்மிட் ஆக சொல்கிறார். எத்தனை ஆகிறார்கள்இந்தியாவில் மிகவும் குறைவு என்கிறது ஓர் ஆய்வு. நிறைய பேருக்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான வசதி இல்லை. நன்றாக சம்பாதிக்கும் குடும்பங்களும் விதிவிலக்கல்ல. வேறு வழியின்றி அட்மிட் ஆனால் சொத்தை விற்று செலவிட நேர்கிறது. அல்லது வட்டிக்கு கடன் வாங்கி பில் கட்டுகின்றனர் என்று மருத்துவ பத்திரிகை லான்செட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மற்ற நாடுகளில் இப்படி இல்லை.

இந்தியாவின் மருத்துவ செலவில் 78 சதவீதம் இவ்வாறு தனி நபர்களின் சொந்த பணமாக உள்ளது. இலங்கையில் 53, தாய்லாந்தில் 31, மாலத்தீவில் 14 சதவீதம். மருத்துவமனையில் அதிகம் தங்காமல் புறநோயாளி சிகிச்சை பெற்றாலும் செலவு குறைவதில்லை. ஏனெனில்செலவில் 72 சதவீதம் மருந்து மாத்திரைகளுக்கே போய்விடுகிறது. பற்றாக்குறை இல்லாமல்  நல்லபடியாக நடந்து வரும் குடும்பங்கள்கூட திடீரென வரும் மருத்துவ செலவில் சின்னாபின்னமாகின்றன என்பது பெரும் சோகம்.

இப்படி நமது நாட்டில் ஆண்டுக்கு 4 கோடி பேர் எதிர்பாராத வறுமையில் விழுகின்றனர். குடும்பத்துக்காக சம்பாதிக்கும் நபரின் திடீர் மரணத்தால் ஒரு குடும்பமே எவ்வாறு சீர்குலைந்து போகிறதோ அதற்கு சற்றும் குறைந்ததல்ல மருத்துவ செலவால் ஏற்படும் பாதிப்பு என்பதை லான்செட் ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. மற்ற நாடுகளில் மருத்துவத்துக்காக அரசு ஒதுக்கும் நிதியுடன் இங்குள்ள நிலையை ஒப்பிடவே முடியாது.

ஒரு குடிமகனின் மருத்துவத்துக்காக இலங்கை 88 ரூபாய்தாய்லாந்து 207, மாலத்தீவு 751 செலவிடுகிறது என்றால் இங்கே அது வெறும் 19 ரூபாய். மருத்துவ காப்பீடு மூலம் பலன் அடைபவர்கள் எண்ணிக்கை பெரிதாக தெரிந்தாலும்மக்கள்தொகை அடிப்படையில் அது மிகவும் குறைந்த சதவீதம் என்கிறது ஆய்வு. நாடு முன்னேறுகிறது என்ற கோஷத்தால் போதை ஏறாமல் தடுக்க இத்தகைய ஊசி குத்தல்கள் உதவும். பொருளாதார வளர்ச்சியின் நடுவே புதிய ஏழைகள் உருவாவது ஆரோக்கியமானது அல்ல என்பதை திட்டமிடுவோர் உணர வேண்டிய நேரம் இது.

0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

Blog Archive

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP