ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மோசடிகள்

30 October 2011


கொள்ளை, வழிப்பறி, பிக்பாக்கெட் போன்ற குற்றங்கள் நடந்தால் பெரிய பணக்காரர்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகளும் பாதிக்கப்பட்டனர். ஆனால், இப்போது உலகம் முழுவதும் நவீனமயமாக்கத்தின் காரணமாக யாரும் தங்களுடன் பெரிய அளவில் பணத்தை எடுத்துச் செல்வதில்லை. ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு என்று வந்து விட்டதால், டூத் பேஸ்ட் முதல் தங்கம் வரை கார்டு மூலமாகவே கொள்முதல் செய்து கொள்ளலாம். தெருவுக்குத் தெரு ஏடிஎம் மையங்கள் வந்து விட்டன. அதோடு தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையத்தில் மட்டும் பணம் எடுக்க வேண்டியதில்லை. எந்த வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையத்தில் வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம் என்ற நிலை உள்ளது.

நவீனமயத்துக்கு ஏற்ப மோசடிகளும் மாறிவிட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை வெளிநாட்டு கிரெடிட் கார்டுகள் போல போலியான கார்டுகளை தயாரித்த ஒரு கும்பல், தமிழகத்தில் வந்து அதை பயன்படுத்தி மோசடி செய்தனர். பின் கடைக்காரர்கள், நமது நாட்டு வங்கியில் பணம் பெறுவார்கள். இந்திய வங்கி, வெளிநாட்டு வங்கியைத் தொடர்பு கொண்டால், எங்கள் வங்கி கணக்கு வைத்திருப்பவர் வெளிநாடு செல்லவில்லை என்று கூறுவார்கள். அதன்பின் வங்கிகள் சார்பில் புகார் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தன.
ஓட்டல்கள், டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்ஸ் ஆகியவற்றில் பணியாற்றுவார்கள். அவர்களிடம் ஸ்கிம்மர் என்ற சிறிய மிஷின் இருக்கும். இந்த மிஷினில் அந்த கார்டை ஒரு முறை தேய்த்து விட்டால், கார்டில் உள்ள அனைத்து தகவல்களும் ஸ்கிம்மர் மிஷினில் பதிவாகிவிடும். பின் ஸ்கிம்மரில் இருந்து கம்ப்யூட்டரில் கிரெடிட் கார்டு பற்றிய தகவல்களை பதிவு செய்து, பின் போலியான கார்டுகளை தயாரித்து இந்தியா போன்ற நாடுகளில் அவற்றை பயன்படுத்தி வந்தனர்.

முதல் வகை மோசடி கீஹோல் கேமரா&ஸ்லாட்

செக்யூரிட்டியோ, கேமராவோ இல்லாத ஏடிஎம் மையத்தை தேர்ந்தெடுக்கின்றனர். ஏடிஎம் மிஷினை படம் எடுத்து கனடாவில் உள்ள ஸ்டீவ் என்பவருக்கு அனுப்புகின்றனர். அவர், கார்டு செலுத்தும் துவாரம் அளவுக்கு சிறிய ஸ்லாட் என்ற கருவியை தயாரித்து அனுப்புகிறார். அதை இந்த ஏடிஎம்மில் கார்டு செலுத்தும் துவாரத்தில் வைக்கின்றனர். பின் மானிட்டர் அருகே சிறிய கேமராவையும் வைத்து விட்டுச் செல்கின்றனர்.

பின் ஏடிஎம் மையத்தின் அருகே லேப் டாப்புடன் நிற்கின்றனர். யாராவது பணம் எடுக்க கார்டை செலுத்தினால், முதலில் இவர்கள் பொறுத்திய ஸ்லாட் கருவியில் பதிந்து விட்டுத்தான் உள்ளே செல்லும். அப்போது வெளியில் வைத்திருக்கும் லேப் டாப்பில் ஏடிஎம்மின் ரகசிய குறியீடுகள் அனைத்தும் வந்து விடும். பின், கேமரா மூலம் அவர்கள் போடும் பின் நம்பரையும் லேப் டாப்பிலேயே பார்த்து விடுகின்றனர். பின் புதிய ஏடிஎம் கார்டை தயாரித்து விடுகின்றனர்.

ஸ்கிம்மர் மூலம் கார்டு

பெட்ரோல் பங்கில் ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து காரில் வரும் 10 பேரின் கார்டை கருவியில் தேய்க்கும்போது மோசடி கும்பல் கொடுக்கும் ஸ்கிம்மர் கருவியிலும் தேய்த்து தரும்படி கூறுகின்றனர். அவர்கள் தேய்த்துக் கொடுத்தவுடன் அதை வைத்து கம்ப்யூட்டரில் தகவல்களை பதிவு செய்து, என்கோடர் கருவி மூலம் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை தயாரிக்கின்றனர்.

கூரியர் சர்வீஸ் மூலம் மோசடி

வங்கிகளில் இருந்து கூரியர் சர்வீஸ் மூலம் ஏடிஎம் கார்டுகள் அனுப்பப்படும். கூரியர் ஊழியர்கள் துணையுடன் கவரைப் பிரித்து, ஏடிஎம் கார்டை எடுத்து, ஸ்கிம்மர் மிஷினில் தேய்த்து, என்கோடர் கருவி மூலம் ஏடிஎம் கார்டை தயாரிக்கின்றனர். தபால்களை கிழிக்காமல் பிரிக்க ஹேர் ஹாட் கன் என்ற கருவியை பயன்படுத்துகின்றனர்.

ஷாட்டி யார்?

யாழ்ப்பாணம்தான் ஷாட்டியின் சொந்த ஊர். 1992ல் கனடாவுக்கு அப்பாவுடன் சென்றார். பிளஸ் 2 வரை படித்தார். பின் அப்பா வேலை செய்யும் கலர் லேபில் வேலை கிடைத்தது. அப்போதுதான் ரஷ்யாவை சேர்ந்த ஸ்டீவ் என்பவரின் பழக்கம் கிடைத்தது. ஆரம்பத்தில் அவர் கொடுக்கும் ஏடிஎம் கார்டில் பணம் எடுத்துக் கொடுத்தான். அதில் கமிஷன் கிடைத்தது. பின் அவரிடம் இருந்து ஸ்கிம்மர், என்கோடர் மிஷின் மூலம் கார்டு தயாரிக்கும் கலையை கற்றான். பல வழக்குகளிலும் சிக்கினான். 

அதிகமான வழக்கில் சிக்கியதால், கனடா நாட்டில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இலங்கைக்கு 2007ல் அனுப்பப்பட்டான். பின் 2009ல் தமிழகம் வந்தான். அப்போதே மோசடியில் சிக்கினான். இவனுக்கு சென்னையில் உள்ள மோசடி கும்பல்களின் பழக்கம் கிடைத்தது. அவர்களுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டான். தன்னுடைய கூட்டத்தில் இலங்கையை சேர்ந்தவர்களைத்தான் சேர்த்திருந்தான்.

தனி வெப்சைட்

வெளிநாட்டில் உள்ளவர்களின் கிரெடிட், டெபிட் கார்டுகளின் தகவல்கள் அனைத்தும் மோசடிக்கு பயன்படுத்தும் ஒரு வெப்சைட்டில் இடம்பெற்றிருக்கும். அந்த வெப்சைட்டை தொடர்பு கொண்டால், நம்முடைய வங்கிக் கணக்கை கேட்கும். அப்போது அதற்கு குறிப்பிட்ட அளவு பணம் கேட்கும். அதை செலுத்தி விட்டால், நம்முடைய இ மெயில் முகவரிக்கு அனைத்து தகவல்களையும் அனுப்பி விடும். அதில் இருந்து போலி கிரெடிட் கார்டுகளை தயாரிக்கலாம். ஷாட்டியும் அதேபோலத்தான் 2 ஆயிரம் கார்டுகளின் தகவல்களை வாங்கியுள்ளான். இன்னும் யார் யாரின் கார்டுகளை போலியாக தாயாரித்து வைத்துள்ளதோ இந்த மோசடிக் கும்பல். போகப் போகத்தான் தெரியும்.

0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

Blog Archive

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP