அனைத்தையும் நாம் கவனிக்கும் பயிற்சி

04 October 2011


காய்கறி வாங்கப்போன ஹசன் இன்னும் வந்தபாடில்லை. சமையல் அறையிலிருந்து அம்மா வெளியே வந்து எட்டி, எட்டிப் பார்த்துவிட்டுப் போனார். அடுப்பில் குழம்பு கொதித்துக் கொண்டிருந்தது. காய்கறிகளை இனிமேல்தான் போட வேண்டும். பெரியவர் குளித்துவிட்டு ரெடியாகிவிட்டார். ஹசனிடம் பொருட்கள் வாங்கி வரச் சொல்லியிருந்தார் அம்மா. மழை வேறு தூற ஆரம்பித்துவிட்டது. "குடை கொண்டு போனானோ இல்லையோ' அம்மா கவலைப்படுவதற்குள் ஹசன் வந்துவிட்டான்.
""ஏம்ப்பா நேரமாயிடுத்து? நனைஞ்சியா?'' அம்மா ஹசன் நீட்டிய பையை வாங்கிக் கொண்டார்.
தேங்காய், முட்டைக் கோஸ், பூசணிப்பத்தை, பால் பாக்கெட் இவைகளுக்கு அடியில் பூவும், தக்காளிப் பழமும் நசுங்கிக் கிடந்தன! நசுங்கிய தக்காளியைக் கையில் எடுத்த அம்மா ஹசனைப் பார்த்தார். "என்னடா, இப்படி?' என்பது போன்ற பார்வை.
முதலில் தக்காளியும், பூவும் வாங்கிட்டேன் 'மா...பால் பாக்கெட் வாங்கத் தெருவைக் கடந்து எதிர்பக்கம் போனேன். அப்புறம், தேங்காய், பழம் கேட்டது நினைவுக்கு வந்தது. திரும்பவும் வந்து தேங்காய், கேபேஜ், பூசணி வாங்கினேன். வெற்றிலை வாங்க மறுபடியும் எதிர் சாரிக்குப் போனேன். அங்கு இல்லை என்றதும் ஸ்டேஷன் ரோடுக்குப் போய் வாங்கி வந்தேன். ஒரே அலைச்சல்!'' அலுத்துக் கொண்டான்  ஹசன்.
ஏலக்காய், பச்சைப் பழம் வாங்கச் சொன்னேனே, வாங்கிட்டியா?'' அம்மா கேட்டாள்.
அட, அது மறந்தே போச்சே!'' நாக்கைக் கடித்துக் கொண்டான் ஹசன்
டேய் ஹசன்,  நம்ம சந்து முனையிலே மாணிக்கம் வண்டியிலே அயர்ன் செஞ்சிண்டிருப்பாரே...வந்தாச்சாஇஸ்திரி போடறாரா?''என்று அக்கா ஆய்ஷா கேட்டார் நான் கவனிக்கலையே...''
என்னடா நம்ம சந்திலே திரும்பும்போது முனையிலே நாலு சக்கர வண்டிய நிறுத்தி இஸ்திரி போட்டிண்டிருப்பாரே...அது உன் கண்ணிலே படலியா?'' ஆச்சரியத்தோடு அக்கா கேட்டார்.
ஏதோ ஞாபகமா வந்தேன்...நான் சரியாகக் கவனிக்கலே''
சாயந்திரம் அலியை பார்க்க  மயிலாப்பூர் போகனுமே. டிரஸ்ஸ அயர்ன் செய்துக்கலானு பார்த்தேன்''   தனக்குள் சொல்லிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள் ஆய்ஷா.
ஹசன் பெரிய அக்கா பையன் அலி.  வெளிநாட்டிலிருந்து வந்திருந்தான். இன்று அவன் வீட்டுக்கு கூப்பிட்டிருந்தார்கள். ""சாயந்திரம் எல்லோரும் போகலாம்'' என்று அப்பா சொல்லியிருந்தார். அலி ஊருக்கு வந்ததற்காக ஸ்வீட் செய்வதற்காகத்தான் அம்மா, ஏலக்காய், பச்சை பழம் வாங்கி வரச் சொன்னாள்.  ஹசனுக்கு மறந்துவிட்டது.
மாலை அலியை பார்க்கப் போனவர்கள் சீக்கிரமே வீடு திரும்பிவிட்டார்கள். இரவு சாப்பாடு முடிந்ததும் குழந்தைகள் தாத்தாவிடம் வருவார்கள். அவர் நிறைய கதைகள் சொல்வார். துஆக்கள், சிறிய குர்ஆன் சூராக்கள் சொல்லிக் கொடுப்பார். நல்ல விஷயங்கள் பற்றி பேசுவார். அன்றும் ஹசனும் ஆய்ஷாவும் தாத்தாவிடம் வந்தார்கள்.
""உங்களுக்கு ஒரு டெஸ்ட். யார் சரியாகச் சொல்கிறீர்கள் பார்க்கலாம்'' என்று தொண்டையைக் கணைத்துக் கொண்டே துவங்கினார் தாத்தா.
அலியை பார்க்க போயிருந்தோமே, அங்கு குழந்தை அத்னான் என்ன நிறச் சட்டை, என்ன நிறக் கால்சட்டை அணிந்திருந்தான். அங்கே கேக்கை வைத்திருந்தார்களே,  அந்த மேஜையின் விரிப்பு என்ன நிறம்?''
இருவருக்கும் சரியாகப் பதில் சொல்லத் தெரியவில்லை. ஆளுக்கு ஒரு நிறத்தைச் சொன்னார்கள்.
தாத்தா சிரித்துக் கொண்டே சொன்னார், ""அவன் மஞ்சள் நிறத்தில் ஊதாக் கோடு போட்ட முழுக்கை சட்டை அணிந்திருந்தான். சட்டையில் பை இல்லை. கிரே நிறத்தில் முழுக்கால் சட்டையும், பழுப்பு நிற ஷூவும் போட்டுக் கொண்டிருந்தான். காலில் வெள்ளை நிறக் காட்டன் சாக்ஸ்! அந்த மேஜை விரிப்பின் நிறம் வெளிர் சிவப்பு. அங்கே கேக் வைத்த போது மணி ஆறு முப்பத்தைந்து. அப்போது ஆட்டோ ரிக்ஷாவில் தொப்பி அணிந்து,  அலி அப்பாவுடைய ஆபிஸ் நண்பர் வந்தார். கையில் கறுப்பு நிற ப்ரீஃப் கேஸ் இருந்தது. கடிகாரத்தை வலது கையில் கட்டியிருந்தார். அலின் அப்பா அவரை அழைத்ததிலிருந்து அவர் பெயர் அஸ்லம் என்று தெரிந்தது...''
தாத்தா ஒன்று விடாமல் கூறிய விவரங்களைக் கேட்டு ஆய்ஷாவும், ஹஸனும் அசந்து போனார்கள். ""இவற்றில் ஒன்றைக்கூட நாங்கள் சரியாகக் கவனிக்கவில்லையே'' என்றார்கள்.
""இது ஒரு பயிற்சி. கூர்ந்து நோக்கல் என்கிற பயிற்சி. ஒரு இடத்திற்குப் போனால் அப்படியே இயந்திரம்போல, போய்விட்டு எதையும் கவனிக்காமல் இருந்துவிடக் கூடாது. புதியதாக ஒரு இடத்திற்குப் போனால் போகும் திசை, திரும்பும் பக்கம் எல்லாவற்றையும் கவனித்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். யார் வருகிறார்கள். நம்மைச் சுற்றி என்ன நடைபெறுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும். இது நமக்குப் பெரிதும் பயன்படும். இன்னொரு கதை கூட ஞாபகம் வருகிறது'' என்று தொடர்ந்தார் தாத்தா. குழந்தைகள் ஆர்வத்தோடு கேட்டார்கள்.
""ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்கு ஒரு காரியதரிசியும், பணியாளர்களும் இருந்தார்கள். செல்வந்தருக்கு ஏதேனும் தேவைப்பட்டால் காரியதரிசியிடம் சொல்வார். அவர் பணியாளர்களிடம் கூறி அந்த வேலையை முடித்துக் கொடுப்பார். ஒரு பணியாளருக்குப் பெரிய குறை. பணியாளர்கள் கஷ்டப்பட்டு, உழைத்து பணிகளைச் செய்து முடிக்கிறார்கள். ஆனால் நற்பெயர், அதிக சம்பளம், சலுகைகள் எல்லாவற்றையும் காரியதரிசி தட்டிக்கொண்டு போய்விடுகிறாரே என்பது அவர் குறை. அந்தப் பணியாளரின் குமுறல் செல்வந்தர் காதிலும் விழுந்தது. ஒரு நாள் அவர் அந்தப் பணியாளரை அழைத்தார்.''
""அந்தத் தெரு மடத்தில் ஏதோ கூட்டமாக இருந்ததே, என்னவென்று பார்த்து வா'' என்று கூறி அனுப்பினார். சிறு நேரத்தில் திரும்பி வந்த பணியாளர் ""ஏதோ சொற்பொழிவு நடக்குதுங்க'' என்றார். "" சொற்பொழிவா?  யார் செய்கிறார்கள்'' என்று கேட்டார். பணியாளருக்குத் தெரியவில்லை. ஓடிப் போய் விசாரித்து வந்து சொன்னார். ""எதைப்பற்றி } என்ன தலைப்பில்  சொற்பொழிவு செய்கிறார்'' என்று வினவினார் செல்வந்தர். மீண்டும் ஓடிப்போய் விசாரித்து வந்தார் அந்த ஊழியர்.
""என்றிலிருந்து நடைபெறுகிறது? இன்னும் எத்தனை நாட்கள் நடைபெறும், மாலையில் மட்டும்தானா, காலையிலும் உண்டா?'' இப்படி ஒவ்வொரு கேள்விகளுக்காகவும் ஓடிப்போய் ஓடிப்போய் அலுத்துக் களைத்துப் போனார் அந்த ஊழியர். செல்வந்தர் காரியதரிசியை அழைத்தார்.
""அடுத்த தெரு மடத்தில் ஏதோ கூட்டம் நடைபெறுகிறதாமே?'' என்று வினவினார். காரியதரிசி சென்று விசாரித்து வந்தார். " அன்வர்அலி என்னும் இளைஞர் " தர்கா வழிபாடுகளால் மறுமை வெற்றிக்கு ஏற்படும் கேடு சொற்பொழிவு நடத்துகிறார். தினமும் மாலை ஆறு மணியிலிருந்து இரவு ஏழரை மணி வரை நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலையிலும் உண்டு. இன்னும் ஐந்து தினங்கள் நடைபெற இருக்கின்றன. கட்டணம் ஏதும் இல்லை. சொற்பொழிவு சிறப்பாக இருப்பதால் சுற்றுப்புறங்களிலிருந்தும் மக்கள் வருகிறார்கள்.' என்று முழு விவரங்களையும் கூறி முடித்தார்.
செல்வந்தர் அந்தப் பணியாளரைப் பார்த்தார்."இப்போது புரிகிறதா வித்தியாசம்?' என்றது பார்வை. எதைச் செய்தாலும் முறையாகச் செய்ய வேண்டும். நிறைவாகச் செய்ய வேண்டும். செய்யும் செயல் எதுவாக இருந்தாலும் அதில் ஒரு ஒழுங்குமுறை வேண்டும். இல்லாவிட்டால் வீண் அலைச்சல், பொருள் நஷ்டம்தான் ஏற்படும்'' என்று கூறி முடித்தார் தாத்தா. அங்கு ஒரு நிமிஷம் நிசப்தம் நிலவியது.
""சாமான்கள் வாங்கச் செல்லும்போது நிறைய பொருள்கள் வாங்க வேண்டியிருந்தால் அவைகளை ஒரு காகிதத்தில் குறித்துக் கொண்டுவிடுவது நல்லது. ஒரு பட்டியல் தயார் செய்துவிட்டால் அந்தப் பொருள்கள் எந்தெந்த கடைகளில் கிடைக்கும், எந்த வரிசைக் கிரமத்தில் வாங்கினால் வீண் அலைச்சலும் இல்லாமல் அதிக நேரமும் விரயமாகாமல் வாங்கலாம் என்பதை ஓரளவுக்கு யூகிக்க முடியும். இதனால் நேரம் மிச்சமாவது மட்டுமன்றி, விட்டுப் போகாமல் எல்லாப் பொருள்களையும் வாங்கிவிடலாம். எவற்றைக் கடைசியாக வாங்க வேண்டும்; எவற்றைத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் தீர்மானிக்க முடியும். எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்குமுறை வேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது.''
தாத்தா கூறியதை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டான் ஹஸன். அந்த ஆண்டு இறுதியில் சாரணர் பயிற்சி முகாம் ஒன்று பெரிய அளவில் சிறப்பாக நடந்தது. பல மாநிலங்களிலிருந்து சாரணர்கள் பல குழுக்களாக வந்திருந்தனர். தனது பள்ளியின் சார்பில் ஹஸனும் கலந்து கொண்டான். பயிற்சியின் ஒரு நிகழ்ச்சியில் போட்டி ஒன்று நடந்தது. பங்கேற்றவர்களை ஒரு அரங்கு வழியாகப் போகச் சொன்னார்கள். வெளியே வந்ததும் அந்த அரங்கில் அவர்கள் பார்த்த பொருள்களைப் பட்டியிலடச் சொன்னார்கள். குறைந்த நேரத்தில், சரியாக அதிகப் பொருள்களை எழுதுபவருக்குப் பரிசு! போட்டி முடிவில் ஹஸன் வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள்.
"இந்த சாரணர் அதிகப் பொருள்களை சரியாகப் பட்டியலிட்டதல்லாமல், பார்த்தவற்றை அங்கொன்று இங்கொன்று என்று இல்லாமல் வரிசைக் கிரமமாக குறிப்பிட்டிருந்தார். அது மட்டுமில்லாமல் அரங்கில் மாட்டியிருந்த கெடிகாரம் காட்டிய மணியையும் சரியாகக் குறிப்பிட்டிருந்தார். அவனுடைய உற்று நோக்கும் ஆற்றலைப் பாராட்டி ஹஸனை இந்த ஜாம்பூரியின் சிறப்பு சாரணம் என்று தேர்ந்தெடுக்கிறோம்' என்று அறிவித்தார்கள்.
சக மாணவர்கள் அவனைப் பாராட்டி, கை குலுக்கியபோது மெதுவான குரலில், தாத்தாவுக்கு நன்றி!'' என்றான் ஹஸன்

0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

Blog Archive

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP