ஒரு இலவச மின் இணைப்பு வழங்க மின்வாரியத்துக்கு செல்வு ?.

29 November 2011


தமிழகத்தில் 46 சதவீத மின்சாரம் இலவச திட்டங்களுக்காக விநியோகம் செய்யப்படுகிறதாம்

தமிழகத்தில் இலவச மின்சார இணைப்பு கேட்டு நான்கு லட்சம் விவசாயிகள் காத்திருக்கின்றனர். பதிவு மூப்பு அடிப்படையில் ஆண்டுக்கு 40 ஆயிரம் இணைப்புகள் தான் வழங்க முடியும். இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கு சாத்தியமில்லை. ஒரு இலவச மின் இணைப்பு வழங்க மின்வாரியத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகிறதாம்.

மொத்த மின்சாரத்தில் 28 சதவீதம் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்துக்கும், குடிசைகளுக்கும், கைத்தறி நெசவாளர்களுக்கும் இலவசமாகவே போய் விடுகிறது. மேலும் 18 சதவீதம் "லைன் லாஸ்' என்ற அடிப்படையில் போய் விடுகிறது. இந்த வகையில் 46 சதவீதம் போக, எஞ்சியுள்ள 54 சதவீதம் மட்டுமே நுகர்வோருக்கு வழங்கப்பட்டு அவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

விவசாயத்திற்கு பகலில் ஆறு மணி நேரம், இரவில் 12 மணி நேரம் என்ற அளவில் மின்சாரம் கொடுத்து வருகிறோம். 25 ஆண்டுகளாக இதே கொள்கை தான் பின்பற்றப்படுகிறது. பகலில் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்க வேண்டியிருப்பதால் விவசாயிகளுக்கு பகலில் வழங்கப்படும் மின்சார கால அளவை எப்படி அதிகரிக்க முடியும். அதிலும் இலவச மின்சாரம் பயன்படுத்துவோருக்கு மீட்டரும் கிடையாது. இதனால் ஒவ்வொரு இலவச மின்நுகர்வோரும் எவ்வளவு பயன்படுத்துகிறார்கள் என்ற உண்மையும் தெரிவதில்லை.

இதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காமல் கட்டணத்தை மட்டும் உயர்த்திக் கொண்டே போவதில் ஒரு உருப்படியான தீர்வும் ஏற்படாது. விழிக்குமா தமிழக அரசு. அல்லது ஒட்டு அரசியலுக்கு பயந்து, கண்டு கொள்ளாமல், தொடர்ந்து மக்கள் மீது சுமையை ஏற்றுவது மக்களை மேலும் மேலும் துயரத்தில் ஆழ்த்தும்.  

1 comments:

Adirai Iqbal 6 February 2012 at 13:54  

அஸ்ஸலாமு அலைக்கும்,

நல்ல பதிவு ,
இது உலகமாயமாக்களின் விளைவும் . உலக அங்கியின் கட்டளையுமாகும் . உலகமயமாக்கலால் தங்களது மூல வருவாயை இழந்த விவசாயிகள் ,நெசவாளர்களை , அரசுக்கெதிரான போராட்டங்களிருந்து திருப்பும் செயலே இந்த இலவசங்களும் கூட . நம் நாட்டின் முதுகெலும்புகளான இந்த தொழில்களை முடக்கி பன்னாட்டு கொள்ளைக்கு வழிவகுக்கும் இந்த கொள்கை எப்பொழுது அகற்றப்படுகிறதோ அப்பொழுதான் நம் நாட்டிற்கு விடிவுக்காலம் .

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

Blog Archive

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP