ஆரோக்கியமான வாழ்விற்கு காலை உணவு

20 November 2011


வேலைக்குச் செல்லும் பெரும்பாலான பெண்கள் உணவு விஷயத்தில் சரியாக அக்கறை செலுத்துவதில்லை. காலை சிற்றுண்டி சாப்பிடாமல் அவசரம்அவசரமாக அலுவலகம் செல்வது உடல் நலக் குறைவுக்கு அஸ்திவாரம் போட ஆரம்பிக்கும்.
காலை சிற்றுண்டியை தொடர்ந்து சாப்பிடாமல் வேலைக்குப் போகும் நிலையில்வயிற்றுப் புண் பிரச்னை ஆரம்பிக்கும். பின்னர் அதிக பசி எடுக்க ஆரம்பித்துகோபம் - எரிச்சல் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும்.
தொடர் விளைவுகளாக உடல் சோர்வடையும். நடந்தால் மூச்சு வாங்கும். கால் வீக்கம்மனப் பதற்றம் ஏற்படும். இறுதியில் ரத்த சோகையும் ஏற்படும்.
எனவே பெண்கள் காலை நேர அலுவல்களை முன் தினம் இரவே திட்டமிட்டுசிற்றுண்டியைப் புறக்கணிக்காமல் இருந்தால் இந்த விளைவுகள் ஏற்படாது.

சிலர் `டயட்'டில் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு காலை டிபனை தவிர்ப்பார்கள். இப்படிச் செய்வது நல்லதல்ல என்று ஆய்வு செய்து நிரூபித்து இருக்கிறார்கள். ஆரோக்கியமான வாழ்விற்கு காலை உணவு மிகவும் முக்கியமானது என்பது அந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.     இங்கிலாந்தைச் சேர்ந்த சிக்ரிட் கிப்சன் தலைமையிலான குழுவினர் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டார்கள்.


இந்த ஆய்வில், மற்ற உணவு மற்றும் அதிலிருந்து கிடைக்கும் சத்துகள் ஆகியவற்றை காலை உணவு தான் நிர்ணயிக்கிறது என்பதும், பருப்பு வகைகள் மற்றும் பால் ஆகியவற்றைக் காலையில் உட்கொண்டு வருவது உடலுக்கு நோய் இல்லாத பாதுகாப்பைத் தருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. 19 முதல் 64 வயது வரையிலானவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த ஆய்வில், பெரும்பாலானவர்கள் திட உணவுக்கு முன்பாக காபி அல்லது டீ போன்றவற்றை அருந்த விரும்புவதும் தெரிய வந்தது. ஆய்வு முடிவு குறித்து சிக்ரிட் கிப்சன் கூறும்போது, `பால் மற்றும் பருப்பு வகைகளை நாம் உணவாக எடுத்துக்கொள்ளும்போது உடலுக்குத் தேவையான கால்சியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் கிடைக்கின்றன. அதனால், அவற்றை காலை டிபனாக எடுத்துக் கொள்வது நல்லது' என்றார்.

0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

Blog Archive

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP