காக்கை உச்சாயிருக்க தகுதியான இடமாகவும், கட்சியினர் ஆட்டையை போட மட்டுமே

22 November 2011

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், சுயமரியாதைச் சுடரொளி ஜீவரத்தினம் ஆகியோருக்கு சென்னையில் மணிமண்டபம் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் மொழிப் போராட்ட தியாகி சிதம்பரநாதனுக்கு
சிலை அமைக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.  தமிழர் நலனிலும் மீனவர் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டு சமுதாயத் மாற்றத்தைக் காண கடுமையாக உழைத்தார். அண்ணாவின் அன்பையும், எம்.ஜி.ஆரின் நம்பிக்கையையும் பெற்றுத் திகழ்ந்தார். அவர்களது கோரிக்கைகளை ஏற்று சிங்கார வேலருக்கும், ஜீவரத்தினத்துக்கும் சென்னை பட்டினப்பாக்கத்தில் மணி மண்டபங்கள் கட்டப்படும். குமரி மாவட்டத்தைத் தமிழகத்துடன் இணைத்திட போராட்டம் நடத்திய மொழிப்போர் தியாகி சிதம்பரநாதன்.  தியாகி சிதம்பரநாதனுக்கு கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிலை அமைக்கப்படும் என அந்த மாவட்ட மக்களிடம் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதை நிறைவேற்றும் வகையில், களியக்காவிளையில் சிதம்பரநாதனுக்கு சிலை அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இன்று தமிழக அரசுக்கு உள்ள கடன் தொகை தற்போதய நிலவரப்படி ஒரு லட்சம் கோடியை தாண்டி விட்டது. இவை அனைத்தும் இலவச திட்டங்களால் வந்ததாக பொருளாதார நிபுணர்கள் அறிக்கை சமர்ப்பிக்கிறார்கள். இலவச திட்டங்கள்தான் பலரின் வயிற்றைக் கழுவுகிறது. எனவே அதை குறை சொல்லாதீர்கள் என்கிறார்கள் முதல்வர்கள். தமிழக அரசு போடும் இலவச திட்டங்களில் சத்துணவை தவிர மற்ற அனைத்து திட்டங்களும் விழலுக்கு இறைத்த நீர்தான். யாருக்கும் எந்த பயனையும் இந்த இலசவ திட்டங்கள் ஏற்ப்படுத்தப் போவதில்லை.
மணி மண்டபங்கள், பல தலைவர்களுக்கும் சிலைகள் என்று கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டுகிறீர்கள். இந்த மணிமண்டபங்களால் பறவைகள் கூடுகட்ட மட்டுமே தவிர பொது மக்களுக்கு ஏதும் பயன் இருக்கிறதா?  சிலைகளால் தலைவர்கள் புகழ் ஒன்றும் பரவிவிடப் போவதில்லை. மாறாக காக்கை உச்சாயிருக்க தகுதியான இடமாகவும், கட்சியினர் ஆட்டையை போட மட்டுமே இந்த மணிமண்டபங்களும், சிலை அமைப்பதும் வழிவகுக்கிறது என்பதே உண்மை. இதற்கு ஒதுக்கக் கூடிய பணத்தை விலைவாசிகளை குறைக்க பயன்படுத்தலாமே. கிராமங்கள் தோறும் குளங்களை தூர்வாரி வீணாக கடலில் கலக்கும் மழை நீரை சேகரிக்கக் கூடாதா? எவ்வளவுதான் பணம் இருந்தாலும் பசி தீரும்வரைதான் சாப்பிட முடியும். தூங்குவதற்கு ஆறடி இடம் போதும். உடுத்திக் கொள்ள வேட்டியும் சட்டையும் ஒருவனுக்கு ஐந்து ஆறு செட்கள் இருந்தாலே போதும். தங்குவதற்கு ஒரு வீடு இருந்தால் போதும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுத்தால் இலவசங்கள் தேவையில்லையே. ரோட்டிலே கிடக்கும் குப்பனுக்கும் சுப்பனுக்கும்  வாழ்வதற்கு  வேலையும், விலைவாசியை கட்டுப் படுத்தி வைப்பதும்தான் இப்போது அவசிய தேவை. செய்யுமா தமிழக அரசு அல்லது அதுவும் செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்குமா ?

0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

Blog Archive

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP