வாழ நினைத்தால் வாழலாம்

21 November 2011

தட்டிக் கொடுத்து 15 ஆயிரம் பேரை வேலை வாங்கும் பெண் சோனல்: 


வியாபாரத்திற்கு பெயர் போன குஜராத் மாநிலம் தான்என் சொந்த ஊர்.ஆனால்பிறந்துவளர்ந்ததெல்லாம் மும்பையில். மிக சாதாரண குடும்பம் எங்களுடையது.நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போதேஎன் அப்பா இறந்து விட்டார். நான் வீட்டிற்கு ஒரே பெண் என்பதால்என் அம்மாவைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என்னுடையது.பகுதி நேர வேலைக்காகபல கம்பெனிகள் ஏறி இறங்கினேன். அப்படிக் கிடைத்த இடத்தில்மாலையில் வேலை செய்துவிட்டுபகலில் படிப்பேன்.எனக்கு அப்போது வேலை கிடைத்தது, "ஹவுஸ் கீப்பிங்நிறுவனத்தின் விற்பனைப் பிரிவில். நேரம் குறைவாக இருந்தால்வேலையை சரியாக முடித்துக் கொடுப்பேன்.சொந்தமாக நானே ஒரு கம்பெனி நடத்திநிறைய பேருக்கு வேலை தர வேண்டும் என்றுஎனக்குள் ஒரு லட்சியம் இருந்தது. அந்த வேகம் தான் என்னை உயர்த்தியது. நான் வேலை பார்த்த கம்பெனியில் இருந்து வெளியேறிதனியா, "ஹவுஸ் கீப்பிங்ஆரம்பித்தேன். அப்போது, 10பேர் வேலையில் இருந்தனர். பின்மெதுவாகபல படிகளைத் தாண்டி தான்இந்த உயரம் வந்திருக்கு.இன்று எங்கள் நிறுவனத்தில்வேலை பார்க்கும் ஊழியர்கள் உபயோகிக்கும் உபகரணங்கள் அனைத்தும்விலை உயர்ந்தவை. ஒவ்வொன்றும் 15 லட்ச ரூபாய்க்கும் மேல்.கல்வியறிவு இல்லாதவர்களை வேலை வாங்குவது கஷ்டம். ஆனால்முறையான பயிற்சியிருந்தால்அனைத்தையும் சாதிக்க முடியும். தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் போதும்நமக்கு விசுவாசமாக இருப்பர்!

பெங்களூரில் டியூசன் சென்டர் நடத்தும் கல்யாணி டீச்சர்:

சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம்சிறுகூடல்பட்டி. கணவருக்கு திருவண்ணாமலை. நான் பிறந்து,வளர்ந்தது எல்லாமே பெங்களூரு தான். குடும்ப வறுமை காரணமாகபி.எஸ்சி.வரை தான் படிச்சேன். படிக்கிறப்போ "என்னவாகப் போற?'ன்னு கேட்டா, "டீச்சர்என்று சொல்வேன். "டிகிரி'முடித்ததும்வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பள்ளியில், 2,500 ரூபாய் சம்பளத்தில், "டீச்சர்வேலையில் சேர்ந்தேன்."ஸ்கூல்முடிந்ததும் வீட்டிற்கு வந்துஅக்கா குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருவேன். அவர்கள் திடீரென திறமையான மாணவர்களாக மாறியதை பார்த்துஎங்கள் தெருவில் வசித்த பள்ளி மாணவர்களும் என்னிடம், "டியூசன்படிக்க வர ஆரம்பித்தனர். திருமணத்திற்குப் பின்,திருவண்ணாமலையில், "பிரைமரி ஸ்கூல்ஆரம்பித்தோம். அது நஷ்டமடைந்தது. மீண்டும் பெங்க ளூருக்கே வந்துஏற்கனவே பணிபுரிந்த பள்ளியிலேயே பணிபுரிந்தேன்.என் கணவருக்கு, "ட்ரை ஐ'நோய் வந்து பார்வை போய்விட்டது. அவரால் வேலைக்குச் செல்ல முடியாத சூழல். ஆசிரியர் பணியில் வரும் வருமானம் போதாததால்ஏற்கனவே நடத்தி வந்த, "டியூசன் சென்டரை'விரிவுபடுத்த முடிவெடுத்தோம். 2006ம் ஆண்டு, 30 பேரைக் கொண்டு, "டியூசன் சென்டரை'ஆரம்பித்தோம். அந்த 30 பேரும் முதல் வகுப்பில் தேறினார்கள்.மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் வாங்கினாள்ஒரு மாணவி. அதற்கடுத்த ஆண்டே 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் எங்கள், "டியூசன் சென்டரில்சேர்ந்தனர்.இன்றைக்கு, 350 மாணவர்கள், 4 ஆசிரியர்கள் கொண்ட, "டியூசன் சென்டராகவளர்ந்திருக்கிறோம். தேர்வு முடிவுகள் வெளியாகும் தருணங்களில், "சாக்லேட்ஸ்கொண்டு வரும் மாணவர்களோட கண்களில் தெரியும் சந்தோஷம்எனக்கு இந்த ஜென்மத்திற்கான ஆத்ம திருப்தியை கொடுக்கிறது!

பிசினசாக மாறிய பொழுதுபோக்கு...


பேஷன் நகை டிசைனர் பவித்ரா: வீட்டிலேயே இருந்து நாமளே ஏதாவது தொழில் செய்யணும்னு தான் நான் செய்துக்கிட்டிருந்த வேலையை விட்டேன். எதை யும் செய்ய முடியுங்கிற நம்பிக்கை இருந்தது. ஆனா, என்ன செய்யப்போறோம்னு தெளிவு இல்லை. அப்பதான் ஒரு ஐடியா வந்தது. பர்சனல் பயன்பாட்டுக்காக, "ஆர்டிபிசியல் ஜுவல்லரி' நான் செய்வதுண்டு. சின்ன முதலீட்ல வீட்டிலிருந்தே நகை செஞ்சு விற்க ஆரம்பித்தேன்.கோரல், பேர்ல், ஜேட், ஒனிக்ஸ், எமரால்ட், ரூபி என, இன்னும் நிறைய விதமான கற்களை, அமெரிக்காவிலிருந்து மொத்தமா வரவழைச்சு வெச்சிருக்கேன். அங்கேயிருந்து வாங்கி வருகிறவர்கள் அதை அப்படியே மொத்தமா கோர்த்து மாட்டிக்கிறாங்க. ஏன் இதை டிசைனா, பலவித கற்களோட மேட்ச் செஞ்சு அழகான நகை செய்யக் கூடாதுனு தோன்றியது.ஜெய்ப்பூர் தயாரிப்பாளர்கிட்ட நேரடியா தரமான மணிகள் வாங்கி, முதல்கட்டமா தெரிஞ்சவங்களுக்கு டிசைன் செய்து தந்தேன். அப்படியே என் பிசினஸ் வளர ஆரம்பிச்சு, இப்ப நான் நம்பமுடியாத அளவுக்கு என்னை வளர்த்திருக்கு.பெண்களுக்கு பொதுவா நிறைய டிஸ்பிளே வேணும். நிறைய நகைகளை கண்முன்னே பாத்தாதான் அதுல ஒண்ணு செலக்ட் பண்ணுவாங்க. என்கிட்ட 10, 15 செட் நகைகள் தான் இருக்கும். இந்த பிரச்னையை சமாளிக்கிறதுக்காக, "கேட்லாக்' ரெடி பண்ணினேன். இப்ப என்னோட பிசினஸ் நல்லபடியா போயிக்கிட்டிருக்கு. நிறைய ஆர்டர்களும் கிடைக்குது. நல்ல லாபமும் கிடைக் குது.


"பெண்களுக்கான ஒரு கணினி பயிற்சி மையம்!'
 
பெண்களுக்கான சிறப்பு கணினி மையத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் ஞானகுமார்: பள்ளி நாட்களில் விடாமல் துரத்திய வறுமையுடன், நான் கடந்து வந்த பாதை கடினமானது. கஷ்டத்தை புரிந்து கொண்டு படித்ததால், பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றேன். இதனால், கட்டணங்கள் ஏதுமின்றி மேல்நிலைக் கல்வியையும், டிப்ளமோவையும் முடித்து வேலைக்குச் சென்றேன். ஆனால், வேலையில் மனது ஒட்டவில்லை. எனவே, மதுராந்தகத்தில் பிரபல கணினி பயிற்சி நிறுவனத்தில், "கேட்' கோர்ஸ் படித்தேன். அந்த கோர்சையே பாடமாக நடத்தும் ஆசிரியர் பணி கிடைத்தது. நான் கற்கும் போது இருந்த கடினமான பாடப் பகுதிகளை, மிக எளிதாக மாற்றி கற்பிக்க, கம்ப்யூட்டர் சென்டரில் கூட்டம் குவிந்தது.அதன் மூலம், கிடைத்த வருமானத்தைக் கொண்டு, தொலைதூரக் கல்வி மூலம் எம்.சி.ஏ., எம்.பில்., படித்தேன். என் திறமையைப் பார்த்த நிறுவனம், மதுராந்தகம் கிளைக்கு பொறுப்பாளராக நியமித்தது.கிடைக்கும் நேரத்தில் ஆன்-லைன் டியூசனும், 4 முதல் 12 வயதிற்குட்பட்டவர்களுக்கு, "அபாகஸ்' பயிற்சியும் கொடுத்தேன். குழந்தைகளின் வகுப்பு முடியும் வரை காத்திருக்கும் தாய்மார்களில் ஒருவர், "எங்களுக்கும் ஒரு கம்ப்யூட்டர் வகுப்பு இருந்தால், நாங்களும் கற்றுக் கொள்வோமே' என்று கேட்டதால், பெண்களுக்கென தனி பயிற்சி மையத்தைத் தொடங்கினேன்.இந்த மையத்தில் நூலகம், கிரெச், ப்ளே ஸ்கூல் போன்றவையும் உள்ளன. குறைவான கட்டணமாக இருப்பதுடன், அதை தவணை முறையில் கட்டிக் கொள்ளும் வசதி உள்ளதால், மதுராந்தகம் பகுதியிலுள்ள பெண்களின் மத்தியில் வரவேற்பு கூடியிருக்கிறது. இதுவரை 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கணினி பயிற்சியளித்திருக்கிறேன்.

0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

Blog Archive

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP