சுறுசுறுப்பாக வைத்திருக்க !

18 November 2011

வேலை செய்யும்போது தூக்கக் கலக்கமாக இருக்கிறதா, தூக்கம் கலையவும் சக்தி பெருகவும் உடனே முட்டை சாப்பிடுங்கள் என்கின்றனர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
சாக்கலேட்டுகள், பிஸ்கோத்துகள், இனிப்புகளில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளைவிட முட்டையில் உள்ள புரதச்சத்துதான் தூக்கத்தைப் போக்கி சுறுசுறுப்பாக வைத்திருக்கும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
நம்மை விழிப்புடன் இருக்க வைத்து, உடலில் உள்ள கொழுப்புகளை எரித்துக் கரையவைக்கும் மூளைச்செல்களைப் பாதிப்பது எது என்று ஆராய்ச்சி செய்தனர். அப்போது சேதம் அடைந்த மூளைச் செல்களுக்கு, முட்டையில் உள்ள புரதச்சத்து மாதிரிகளை உட் செலுத்தியபோது மூளை சுறுசுறுப்பாகி நன்றாக வேலை செய்ததாம். அப்போது ஆரெக்ஸின் என்ற ஊக்கி வெளிப்பட்டதாம்.
டாக்டர் டென்னிஸ் புர்தகோவ் தலைமையிலான குழு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டது. ரொட்டிக்கோ வேறு தின் பண்டத்துக்கோ தொட்டுக்கொள்ள ஜாம் வேண்டுமா, முட்டையின் வெள்ளைக்கரு வேண்டுமா என்று கேட்டால் வெள்ளைக்கருவே வேண்டும் என்று கேட்டு சாப்பிட வேண்டும் என்கிறது "நியூரான்' பத்திரிகையில் வெளியான ஆய்வுக்குழு அறிக்கை.
முட்டை வெள்ளைக்கருவின் மகாத்மியம் இத்தோடு முடியவில்லை. இதை பிரிட்டனைச் சேர்ந்த ஊட்டச்சத்து அறக்கட்டளையும் வேறு சோதனைகளுக்குப் பயன்படுத்தியது. முட்டையின் வெள்ளைக் கருவிலும் கொழுப்புச் சத்து இருந்தாலும் அந்தக் கொழுப்பு மாரடைப்பை ஏற்படுத்துவதில்லையாம். மிகச் சிலருக்கு மட்டுமே இந்தக் கொழுப்பால் மாரடைப்பு ஏற்படுகிறதாம்.
சிகரெட், பீடி புகைத்தல், தொப்பை (சரிந்து) விழும் அளவுக்கு தொடர்ந்து கண்டதையும் சாப்பிடுதல், உடல் பயிற்சியே செய்யாமல் சோம்பேறிகளாக இருத்தல் போன்ற காரணங்களால்தான் மாரடைப்பு அதிகம் வருகிறது என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
பால், தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றை அதிகம் சாப்பிடாமல், தினமும் ஒரு 6 கிலோ மீட்டராவது நடந்தே சென்று பழகுங்கள். (அதாவது - கட்டண, விலை உயர்வுகளைப் பற்றி அலட்டிக் கொள்ளாதீர்கள்; இப்போது அரசு உயர்த்திய அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு எல்லாம் நம்முடைய உடல் நலம் காக்கும் மாநில அரசின் நடவடிக்கை என்று ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொள்ளுங்கள்!)

0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

Blog Archive

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP