கறிவேப்பிலை சாகுபடிக்கு மானியம் உண்டு

17 November 2011

கறிவேப்பிலை பயிரிட்டால் அதிக லாபம் பெறலாம். எனவே கறிவேப்பிலை பயிரிட விவசாயிகள் முன்வர வேண்டும் என தோட்டக்கலை உதவி இயக்குநர் மோகன்தாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்த அவரது செய்திக் குறிப்பு:
மாவட்டங்களில் போதிய அளவுக்கு கறிவேப்பிலை சாகுபடி செய்யப்படவில்லை. இதனால் நமது தேவைக்கு அண்டை மாவட்டங்களை எதிர்பார்த்திருக்க வேண்டியுள்ளது.
இதை கருத்தில் கொண்டு கறிவேப்பிலை சாகுபடியை வேளாண்துறை ஊக்குவித்து வருகிறது. இதற்கு துறை மூலம் மானியமும் வழங்கப்படுகிறது.
கறிவேப்பிலை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் தோட்டக்கலைத் துறையை அணுகி கறிவேப்பிலை செடிகளை மானியத்துடன் பெற்றுச் செல்லலாம்.
கறிவேப்பிலை அதிக வருமானம் பெற்றுத்தரும் பயிராகும். ஒர் ஆண்டு பயிர் செய்தால் பல ஆண்டுகள் வரை பராமரித்து அதிக வருமானம் பெறலாம்.
நோய், பூச்சி ஆகியவை அதிக அளவில் தாக்காத பயிர் கறிவேப்பிலை ஆகும். இதனை பயிரிட அதிக வேலையாட்கள் தேவையில்லை. பராமரிப்பு செலவும் குறைவு. எனவே விவசாயிகள் கறிவேப்பிலை பயிர் செய்து பயன்பெறலாம் என மோகன்தாஸ் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

Blog Archive

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP